குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிரான மனுக்களை விரைந்து விசாரிக்க வேண்டும் என உச்ச நீதிமன்றத்தில் கபில் சிபல் முறையிட்டார். அப்போது, “சபரிமலை வழக்கில் வாதங்கள் முடிந்ததும், குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிரான மனுக்கள் விசாரிக்கப்படும்” என தலைமை நீதிபதி எஸ்.ஏ. போப்டே கூறினார்.
முன்னதாக மத்திய அரசின் கூடுதல் அரசு வழக்குரைஞர் கே.கே. வேணுகோபால், “இது குறித்து சில நாட்களில் பதிலளிக்கப்படும்” என்றார். சபரிமலை கோயில் மற்றும் மசூதிகளில் பெண்கள் நுழைவது, தாவூதி போஹ்ரா சமூகத்தில் பெண்கள் மீது இழைக்கப்படும் மூடநம்பிக்கை நடைமுறை உள்ளிட்ட பல்வேறு மத விஷயங்களை உள்ளடக்கிய வழக்கை ஒன்பது நீதிபதிகள் கொண்ட அமர்வு விசாரித்துவருகிறது.
இதையும் படிங்க: நீங்கள் செய்த குற்றம் என்ன? முகம் பார்த்து ஜாதகம் சொல்லும் கிளி!