ETV Bharat / bharat

டெல்லியில் பாஜக ஆட்சி அமைந்தால் ஷாஹீன் பாக்கில் ஓருத்தன் கூட இருக்க மாட்டான் - பர்வேஷ் வர்மா சூளுரை - ஷாஹீன் பாக் டெல்லி சட்டப்பேரவை தேர்தல்

டெல்லி : சட்டப்பேரவை தேர்தலில் பாஜக வெற்றிபெற்றால் அடுத்த நாளே ஷாஹீன் பாக்கில் ஒருவர் கூட இருக்கமாட்டார்கள் என பாஜக நாடாளுமன்ற உறுப்பினர் பர்வேஷ் வர்மா சூளுரைத்துள்ளார்.

Parvesh Verma, பர்வேஷ் வர்மா
Parvesh Verma
author img

By

Published : Jan 28, 2020, 11:57 PM IST

டெல்லியில் வரும் பிப்ரவரி 8ஆம் தேதி சட்டப்பேரவை தேர்தல் நடைபெறவுள்ளது. இதனையொட்டி பாஜகவை ஆதரித்து டெல்லி விகாஸ்பூரி தொகுதியில் நாடாளுமன்ற உறுப்பினர் பர்வேஷ் வர்மா பரப்புரை செய்தார்.

அப்போது பேசிய அவர், "ஷாஹீன் பாக் பகுதியில் லட்சக்கணக்கான மக்கள் கூடியிருக்கின்றனர். அவர்கள் உங்கள் வீடுகளுக்குள் புகுந்து உங்களது சகோதரிகளையும், மகள்களையும் பாலியல் வன்புணர்வு செய்து கொன்றுவிடுவர்.

ஆகையால் டெல்லி மக்கள் நன்கு யோசித்து தேர்தலில் வாக்களிக்க வேண்டும். இல்லையென்றால் நாளை உங்களைக் காப்பாற்ற பிரதமர் மோடியோ, உள்துறை அமைச்சர் அமித் ஷாவோ யாரும் வருமாட்டார்கள்" என்றார்.

மேலும் பேசிய அவர், "பிப்ரவரி 11ஆம் தேதி டெல்லியில் பாஜக ஆட்சி அமைத்தால், டெல்லி ஷாஹீன் பாக்கில் (போராட்ட களம்) ஒருவர் கூட இருக்கமாட்டார்கள்" என சூளுரைத்தார்.

ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், வங்கதேசம் உள்ளிட்ட அண்டை நாடுகளில் மதத்துன்புறுத்தலுக்கு ஆளாகி 2014 டிசம்பர் 31ஆம் தேதிக்குள் இந்தியாவுக்கு அடைக்கலம் தேடிவந்த சிறுபான்மை இந்துக்கள், கிறிஸ்வதவர்கள், சீக்கியர்கள், சமணர்கள், பௌத்தர்கள், பார்சிகளுக்கு குடியுரிமை வழங்க இந்தச் சட்டம் வழிவகைசெய்கிறது.

ஆனால் இது இஸ்லாமியர்களுக்கு எதிராக உள்ளதென நாடு முழுவதும் தொடர் போராட்டங்கள் நடைபெற்றுவருகின்றன. அதன்பகுதியாக டெல்லி ஷாஹீன் பாக் பகுதியிலும் போராட்டம் நடைபெற்று வருகிறது.

இதையும் படிங்க : சி.ஏ.ஏ. விவகாரத்தில் ஜனநாயக அரசின் உரிமையை கேள்விக்குள்ளாக்குவதா? - அறிவுறுத்திய இந்தியா!

Intro:Body:

Parvesh Verma

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.