இந்திய விமானப்படையின் 26ஆவது தளபதியாக ராகேஷ்குமார் சிங் பதோரியா இன்று பொறுப்பேற்றுக் கொண்டார்.
இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த அவர், ஐநா பொதுச்சபையில் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் இந்தியா மீது அணு ஆயுதப் போர் ஏற்பட வாய்ப்புள்ளதாக எச்சரித்தார். இது அணு ஆயுதங்கள் குறித்த அவரது சொந்தப் புரிதல் என்றார். மேலும், இந்திய விமானப்படை எந்த சவால்களையும் துணிந்து எதிர்கொள்ளும் எனவும் அவர் கூறினார்.
ரபேல் விமானங்கள் குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், வான்வழித் தாக்குதலின் போக்கை மாற்றும் திறனுடைய சிறந்த விமானம் ரபேல், பாகிஸ்தான், சீனா போன்ற நாடுகளை எதிர்கொள்ள இந்தியாவிற்கான சிறந்த ஆயுதம் ரபேல் போர் விமானங்கள் என்றார்.
இவர் ரபேல் ரக போர் விமானங்களை இந்திய விமானப்படைக்கு கொண்டுவந்ததில் பெரும் பங்காற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க: 'பயங்கரவாதம் மிகப்பெரிய அச்சுறுத்தலாக உள்ளது' - ராஜ்நாத் சிங்