ETV Bharat / bharat

அழிந்துவரும் பல்லுயிர் பெருக்கத்தை பாதுகாக்கும் வனவிலங்கு ஆராய்ச்சியாளர் - Wildlife researcher endangered biodiversity in puducherry

புதுச்சேரி: கல்லிலேயே வனவிலங்கு சரணாலயம் உருவாக்கி அழிந்துவரும் பல்லுயிர் பெருக்கத்தை பாதுகாக்கும் ஆராய்ச்சியாளர் குறித்த செய்தித் தொகுப்பைப் பார்க்கலாம்.

பல்லுயிர் பெருக்கத்தை பாதுகாக்கும் வனவிலங்கு ஆராய்ச்சியாளர்

author img

By

Published : Oct 10, 2020, 5:49 PM IST

Updated : Oct 10, 2020, 8:04 PM IST

வனவிலங்கு பாதுகாப்புப் பணி தற்போது சமூகப் பங்களிப்பு கூடியதாக மாறி உள்ளது. இதன் மூலம் வனவிலங்குகள் குறித்த புரிதல் ஏற்படுகிறது.

குறிப்பாக இப்பணியில் இளைஞர்கள் பலர் ஈடுபட்டுவருகின்றனர். மேலும் தன்னார்வ தொண்டு அமைப்பினரும் ஈடுபட்டுவருகின்றனர்.

பல்லுயிர் பெருக்கத்தை பாதுகாக்கும் வனவிலங்கு ஆராய்ச்சியாளர்

அதன் ஒரு பகுதியாக புதுச்சேரியில் வனவிலங்கு ஆராய்ச்சியாளர் பூபேஷ் குப்தா ஈகோ பவுண்டேஷன் ஒன்றை நடத்திவருகிறார். இவர் சென்ற 17 ஆண்டுகளாக பல்லுயிர் பெருக்கம் ஆராய்ச்சியில் (wild life) ஈடுபட்டுவருகிறார்.

அதன்படி அழிவின் விளிம்பில் உள்ள நட்சத்திர ஆமை, புள்ளி வாத்து உள்ளிட்ட உயிரினங்களை பாரதி பூங்கா, வனத் துறை அலுவலகம் உள்ளிட்ட இடங்களில் தத்துரூபமாக கல்லிலேயே உருவாக்கி சரணாலயம் அமைத்துள்ளார். அதோடு மட்டுமல்லாமல் அங்கு வரும் பொதுமக்கள், சுற்றுலாப் பயணிகளுக்கு வனவிலங்குகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்திவருகிறார்.

இதுகுறித்து பூபேஷ் குப்தா கூறுகையில், "வனவிலங்குகளின் மீது மக்களிடம் உள்ள பயத்தைப் போக்கும்விதமாக அவற்றை தத்ரூபமாக கிரானைட் கற்களில் சிற்பங்களாகச் செதுக்கிவருகிறேன். இதனால் சிற்ப ஓவியங்களுக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

இவற்றை மக்கள் கூடும் பகுதியான பாரதி பூங்கா, வனத் துறை அலுவலகத்தில் வைத்துள்ளேன். மேலும் சிற்பங்களை வெளி மாநிலத்திற்கும் அனுப்பிவருகிறேன்.

அதில் குறிப்பாக அந்தந்த மாநிலங்களில் முக்கியத்துவம் வாய்ந்த வனவிலங்குகளை சிற்பங்களாக்குகிறேன். இதனால் இந்தியா முழுவதும் எனக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

வனவிலங்குகள் குறித்து மாணவர்கள் தெரிந்து கொள்வதற்காக ஓவியங்கள் வரைந்து கொடுக்கிறேன். இந்தியா முழுவதும் பள்ளி, கல்லூரியில் பயிலும் சுமார் 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு வனவிலங்குகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளேன்.

குறிப்பாக புதுச்சேரியில் வனத் துறை அலுவலகத்தில் சுமார் 150-க்கும் மேற்பட்ட பறவைகள், உயிரினங்கள் மாதிரி ஓவியங்கள், சிற்பங்கள் உருவாக்கி சரணாலயம் அமைத்துள்ளேன். இதனால் அங்கு வரும் சுற்றுலாப் பயணிகளுக்கு எளிதில் வனவிலங்குகள் குறித்த புரிதல் ஏற்படுகிறது" என்றார்.

வனப்பாதுகாவலர் சத்தியமூர்த்தி நம்மிடம் பேசுகையில், "புதுச்சேரியில் வனவிலங்குகள் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும்விதமாக சிற்பங்களால் ஆன விலங்குகள், பறவைகள் உருவாக்கி சரணாலயம் அமைக்கப்பட்டுள்ளது. இதற்கு மத்திய அரசு, சுற்றுச்சூழல் அமைச்சகம் அனுமதி வழங்கியுள்ளது.

இதில் 150-க்கும் மேற்பட்ட பறவைகள், விலங்குகளின் ஓவியங்கள் இருபரிமாணம், முப்பரிமாணத்தில் வரையப்பட்டுள்ளது" எனக் கூறினார்.

புதுச்சேரியில் வனவிலங்கு ஆராய்ச்சியாளர்கள் உடன் அரசாங்கம் இணைந்து வனவிலங்குகள் குறித்த விழிப்புணர்வை தொடர்ந்து பொதுமக்களிடம் ஏற்படுத்த வேண்டும் என்பதே வனவிலங்கு ஆர்வலர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

இதையும் படிங்க: கரோனா ஊரடங்கால் தவிக்கும் பெண் ஆட்டோ ஓட்டுநர்: உதவி செய்யுமா அரசு?

Last Updated : Oct 10, 2020, 8:04 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.