தெலங்கானா மாநில தலைநகர் ஹைதராபாத்தில் உள்ள சார்மினார் பகுதியில் காவல் துறையினர் அணிவகுப்பில் ஈடுபடும் வீடியோவை அந்நகர காவல் துறையினர் ட்விட்டரில் பதவிட்டிருந்தனர்.
இந்த ட்வீட்டை ரீ-ட்வீட் செய்து கருத்து பதிவிட்டிருந்த அகில இந்திய மஜ்லீஸ் கட்சியின் தலைவர் அசாதுதின் ஓவைசி, "ஏன் சார்மினாரில் மட்டும் அணிவகுப்பு நடந்தது? செகேந்திராபாத் ரயில் நிலையம், ஹை டெக் சிட்டி, அல்லது ஏதேனும் ஒரு அமெரிக்க மென்பொருள் நிறுவனம் முன்பு செய்ய வேண்டியதுதானே?" எனக் கேள்வியெழுப்பியுள்ளார்.
டெல்லி கலவரத்தை தொடர்ந்து ஹைதராபாத்தின் பல்வேறு பகுதிகளில் காவல் துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர். கடந்த வியாழக்கிழமை, ஹைதராபாத் சார்மினார் பகுதியில் அணிவகுப்பு நடந்தது.
இதையும் படிங்க : டெல்லி கலவரத்தில் உளவுத்துறை அதிகாரி கொலை பயங்கரவாதிகளின் சதியா?