கடந்த மார்ச் மாதம் அறிவிக்கப்பட்ட கரோனா ஊரடங்கு காரணமாக நாட்டின் அனைத்து நடவடிக்கைகளும் முற்றிலுமாக முடங்கியுள்ளன. இதன் நேரடி தாக்கமாக, மற்ற மாநிலங்களில் வேலைபார்த்த லட்சக்கணக்கான தொழிலாளர்கள் வேலையிழந்து, தங்கள் சொந்த ஊர்களுக்குத் திரும்பிச் செல்லும் சூழுல் உருவானது.
குறிப்பாக, பிகார் மாநிலத்தைச் சேர்ந்த தொழிலாளர்கள்தான் இதன்மூலம் பெரிதும் பாதிக்கப்பட்டனர். இந்த விவகாரம் தொடர்பாக அம்மாநில முதலமைச்சர் நிதிஷ் குமார் தனது அதிருப்தியை வெளிபடுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் பேசுகையில், ”நாட்டின் ஒரு மாநிலத்தைச் சேர்ந்த நபர், மற்றொரு மாநிலத்திற்கு வேலைக்குச் செல்லும்போது, அவர்களை குடிபெயர்ந்தவர்கள் எனக் குறிப்பிடுவது ஏன்? இது ஒரு நாடுதான், வசிப்பவர்கள் சக குடிமக்கள்தானே.
அதேபோல் தங்கள் மாநிலத்தில் வேலைசெய்யும் பிற மாநிலத் தொழிலாளர்களை கடினமான காலத்தில் பாதுகாக்க வேண்டியது மாநில முதலமைச்சர்களின் கடமை. இதுபோன்ற சூழலில் பிகார் மாநிலத்திற்குத் திரும்பிய தொழிலாளர்களை அரசு ஒருபோதும் கைவிடாது. அவர்களின் வேலைவாய்ப்பை உறுதிசெய்யும் விதமாக அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படுகின்றன” எனத் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: கர்ப்பிணி யானை பலி: தேடுதல் வேட்டையில் இறங்கிய வனத்துறை!