2020ஆம் ஆண்டின் நிதிநிலை அறிக்கையின்படி, இந்தியாவில் நிலையான விவசாயத்திற்கு மத்திய அரசானது உறுதியளித்துள்ளது. அதில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீத்தாராமன், 2020-21ஆம் ஆண்டுகளில் நான்கு லட்சம் ஹெக்டேரில் இயற்கை விவசாயம் செய்ய திட்டமிட்டிருப்பதாக கூறினார். அதைத்தொடர்நது மத்திய அரசின் பசுமைப்புரட்சி நிதிநிலை அறிக்கைபடி, பரம்பரா கிரிஷி விஞ்ஞான் யோஜன திட்டத்தின் கீழ், கூடுதல் நிலப்பரப்பை ஒப்புதல் அளிக்கப்பட்ட இயற்கை விவசாயத்துக்கு பயன்படுத்த ரூ.500 கோடி ஒதுக்கி கூடுதலாக 0.51 ஹெக்டேர் சேர்க்கப்பட்டுள்ளது.
அதன்மூலம் உள்நாட்டு தேவைகளும், ஏற்றுமதிக்கான உற்பத்தி செய்ய முடியும். அடுத்தப்படியாக விவசாயப் பதப்படுத்தப்பட்ட உணவு ஏற்றுமதி வளர்ச்சி முகமை அறிக்கையின்படி, 2018-19ஆம் ஆண்டுகளில் இயற்கை விவசாயப் பொருட்களின் ஏற்றுமதி தோராயமாக ரூ.5 ஆயிரத்து 151 கோடியாகயிருந்தது. அது 2017-18 விட 49% கூடுதலாகும்.
நிதி அமைச்சரின் பாராட்டத்தக்க நடவடிக்கையின் பயனாக பாரம்பரிய சுற்றுச்சூழல் சார்ந்த விவசாய செயல்முறைகள், இயற்கை விவசாயத்திற்கு திரும்பும் என எதிர்பார்க்கலாம். அதன் தொடர்ச்சியாக, 'ஜய்விக் கேட்டி' என்ற இணையப்பக்கம் ஒன்றை உருவாக்கி அதன் மூலம் இயற்கை விவசாயப் பொருட்களுக்கான சந்தையை வலுப்படுத்துவதுடன், கிராம அளவில் விவசாயப் பொருட்களுக்கான சேமிப்பு கிடங்குகளை உருவாக்கி ‘தான்ய லட்சுமி’ திட்டத்திற்கு அதிகாரம் அளிக்க முடியும்.
இந்த நடவடிக்கைகள் அனைத்தும், பியுஷ் கோயலின் 2019ஆம் ஆண்டு நிதிநிலை அறிக்கையோடு ஒத்துப்போகிறது. அதில், பியுஷ் கோயல் இயற்கை விவசாய விலைபொருள் உற்பத்தியானது மோடி அரசின் விஷன் 2030யின் 8ஆவது பரிணாம வளர்ச்சி எனக் குறிப்பிட்டார். அதன்படியே தற்போதைய நிதிநிலை அறிக்கை அமைந்துள்ளது. இதனிடையே விவசாயப் பதப்படுத்தப்பட்ட உணவேற்றுமதி வளர்ச்சி முகமையானது. 2025ஆம் ஆண்டுகளில் இயற்கை வேளாண் உற்பத்தி பொருட்களின் ஏற்றுமதி 50 பில்லியன் அமெரிக்க டாலர் அளவுக்கு உயர்த்த திட்டமிட்டுள்ளது.
ஆனால் விதை மற்றும் இயற்கை விவசாய துறையை சார்ந்த வல்லுனர்கள் இத்தகைய இயற்கை வேளாண்மை இந்தியாவிற்கான விதை இடுபவர் யார்? என்ற வினாவை எழுப்பி உள்ளனர். நம்மிடம் அந்தளவு சான்று பெற்ற இயற்கை விவசாய விதைகள் உள்ளனவா எனும் வினாவையும் எழுப்பி உள்ளனர். இந்த அளவு ஏறுமதி செய்ய தற்போதைய நிலைமையிலான நிலங்களோ, பாரம்பரிய விதை ரகங்கலோ போதுமானவை அல்ல. திறன்மிக்க வழிமுறைகள் மூலம் இயற்கை வேளாண் விதைகளை உற்பத்தி செய்வதின் மூலமே இத்தகைய வளர்ச்சிக்கு ஆதரவளிக்க முடியும். இதுபோன்ற வளர்ச்சியை தக்க வைத்துக்கொள்ள வேண்டுமெனில் இந்திய விவசாயிகளுக்கு மிகவும் தரம் வாய்ந்த இயற்கை விவசாய விதைகளை வழங்குதல் வேண்டும்.
சுத்திகரிக்கப்படாதது இயற்கை விவசாய விதையல்ல.
பெரும்பாலான இந்தியர்கள் பூச்சி மருந்துகள், பூஞ்சான் மருந்துகளால் மதிப்புக்கூட்டப்படாத விதைகளை, இயற்கை விவசாய விதைகள் என நினைக்கின்றனர். ஆனால் உண்மை அது அல்ல. இயற்கை விவசாய சான்றுப் பெற்ற வயல்களில் இயற்கை உரமிட்டு செப்பனிடப்பட்டு சுற்றுச் சூழலுக்கு உகந்த விவசாய முறைகளை கொண்டு உருவாக்கப்பட்ட விதைகளே உண்மையான இயற்கை விவசாய விதைகளாகும். இன்னும் சொல்லபோனால் தரமான இயற்கை விவசாய விதைகளை இந்தியாவில் பெறுவது சற்று கடினமே. ஏனெனில் அமெரிக்கா, ஜெர்மனி போன்ற நாடுகளிலுள்ளது போல் ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி ஆய்வு கூட வசதி கொண்ட போட்டி நிறைந்த விதை தொழிலோடு ஒப்பிடும் போது நமது இயற்கை விவசாய விதை தொழில் பழமையான நிலையிலேயே உள்ளது.
இயற்கை விவசாய முறையில் உற்பத்தி செய்யப்பட்ட விவசாய விலைபொருட்களுக்கான தேவை அதிகரித்திருப்பதால் விதிமுறைகளும், தரநிர்ணய முறைகளும் கடுமையாக்கப்படும். இயற்கை விவசாய முறைக்கான சான்றளிக்கும் முறைகளில் ஒருமித்த கருத்து ஏற்படுத்துவது போல, இயற்கை முறை விவசாயத்திற்கு தேவைப்படும் விதைகள் அனைத்தும் சான்றளிக்கப்படவேண்டும். தற்போதைய தொழில் நுட்பத்தின் மூலம் சான்றளிக்கும் நிறுவனங்கள் விதைகளிலுள்ள பூச்சிக்கொல்லி மருந்தின் எச்சங்களை கூட மிக துல்லியமாக கண்டுபிடிக்கலாம்.
இந்திய இயற்கை விவசாயத்திற்கான விதையை ஊன்றுவோம்
2024ஆம் ஆண்டு உலக இயற்கை விவசாய விதை சந்தையின் மதிப்பு 5.4 பில்லியன் அமெரிக்க டாலர் எனக் கணக்கிடப்பட்டுள்ளது. எனவே இந்தியா வெறும் இயற்கை விவசாய விலைபொருட்களை உற்பத்தி செய்யும் நாடாகயில்லாமல், இயற்கை விவசாய விலை பொருள் உற்பத்தி மையமாகயிருக்க வேண்டும். எனவே அரசும், பயிர் உற்பத்தியாளரும் இணைந்து உலக சான்று அளிக்கும் நிறுவனங்களின் ஆலோசனையின் படி இந்தியாவிலும் தரமான இயற்கை விவசாய விதைகளை உற்பத்தி செய்யும் கொள்கை முடிவு எடுத்தல் வேண்டும்.
அதன் தொடர்ச்சியாக இயற்கை விவசாய விதை உற்பத்தி மையங்களான சிக்கிம், உத்ரகாண்ட், இமாச்சலம், வடகிழக்கு மாநிலங்களில் உருவாக்க நடவடிக்கைகள் எடுக்கப்படவேண்டும். இயற்கை விவசாயத்திற்கு முன்னோடியாக திகழும் சிக்கிம் மாநிலம் இத்தகைய முயற்சிக்கேற்ற இடமாகும். அதன்தொடர்பாக மத்திய நிதிநிலை அறிக்கையில் தகுந்த வகையில் வரிவிதிப்பில் சலுகைகளை அளித்து இயற்கை விவசாய மண்டங்களில் மேற்கொள்ளப்படும். நில குத்தகை நடைமுறைகளை சுலபமாக்கி விவசாயிகளும், பயிர் உற்பத்தியாளர்களும், உணரத்தக்க உயர் வருமானம் பெரும் வழிகளை உருவாக்குதல் வேண்டும்.
செழிப்பான உயிரினப் பல்வகைமை கொண்ட இந்திய நிலப்பரப்பு ஒரு புதையல் களஞ்சியமாகும். இயற்கையோடு இணைந்து உழைப்பதன் மூலம் இந்திய விவசாயிகள் சிறந்த மகசூலையும் நோய் எதிர்ப்பு கொண்ட விதைகளையும் உற்பத்தி செய்வதோடு நீரையும் நீர் நிலைகளையும் பாதுகாக்க முடியும். தேசிய மரபணு வளங்களின் தேசிய பணியகம் ஒரு புதிய திட்டத்தின் மூலம் இந்த உயிரினப் பல்வகைமை மண்டலங்களில் உள்ள இயற்கை விவசாய விதை உற்பத்தியாளர்களுக்கு அதற்கான நிதியை அரசிடமிருந்து பெற்று திட்டத்தை அமல்படுத்தலாம்.
பன்னாட்டு உயிரின பல்வகைமை, இந்திய விவசாய ஆராய்ச்சிக் கழகம், மாநில விவசாய பல்கலைக்கழகங்கள் போன்ற அமைப்புகள் இத்தகைய இயக்கத்தை பலப்படுத்தலாம். பயிர் உற்பத்தியாளர்கள், விவசாயிகளுக்கு பரிணாம வளர்ச்சி மேம்பட்ட நிலைகளைப்பற்றிய பயிற்சிகளை உருவாக்கலாம். அத்தகைய திட்டப் பணிகள் அரசின் நிதி உதவியோடு நடைமுறைப்படுத்த வேண்டும்.
சுருக்கமாக கூறினால், மோடி அரசானது இந்தியா ஒரு பெரும் இயற்கை வேளாண் பொருட்கள் ஏற்றுமதி நாடாக உருவாவதில் ஏற்படக்கூடிய தடைகளை நீக்க வேண்டும். அத்தகைய தொலைநோக்கு திட்டத்தில் இயற்கை விவசாய விதைகளின் பங்கு முக்கியமானது மட்டும் அல்ல. அந்த திட்டத்தை உறுதியோடு தொடர்ந்தால் விதைகள் ஏற்றுமதியை மேலும் 10 சதவீதம் உயர்த்தமுடியும். இந்திய விவசாயிகளின் வரவும் 4 மடங்கு உயரும். இந்திய இயற்கை விவசாய விலை பொருட்களின் தேவை அதிகரித்துள்ள இந்தச் சூழலில் இந்திய அரசானது 'காற்றுள்ள போதே தூற்றிக் கொள்ளுமா' அல்லது இயற்கை விவசாய விதை உற்பத்தி துறையின் வளர்ச்சியை முளையிலேயே கிள்ளிவிடுமா என்ற கேள்விக்கானப் பதிலை எதிர்பார்த்து நிற்கிறது. இவ்வாறு இந்திரா சேகர் சிங் விளக்கம் அளித்துள்ளார்.
இதையும் படிங்க: அரசியலமைப்பு விழுமியங்களின் பாதுகாவலர் நீதித் துறை: தலைமை நீதிபதி எஸ்.ஏ. போப்டே