ETV Bharat / bharat

குறையும் கரோனா: ஆனால், எச்சரிக்கும் உலக சுகாதார அமைப்பு! - குறையும் கரோனா

டெல்லி: தென் கிழக்கு ஆசிய நாடுகளில் தற்போது கரோனா பரவல் குறைந்தாலும், தளர்வுகளை அதிகப்படுத்தினால் கரோனா மீண்டும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.

WHO
WHO
author img

By

Published : Oct 20, 2020, 9:45 AM IST

கோவிட்-19 பரவலின் தாக்கம் கடந்த சில வாரங்களாக தென் கிழக்கு ஆசிய நாடுகளில் தொடர்ந்து குறைந்துவருகிறது. தொடர்ந்து மூன்றாவது வாரமாக, தென்கிழக்கு ஆசிய நாடுகளில் கரோனா உறுதி செய்யப்படுபவர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது.

இந்தியா, வங்கதேசம் ஆகிய நாடுகளில் கரோனா குறைந்துவருவதே இதற்கு முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது. இருப்பினும், அடுத்துவரும் பண்டிகை காலத்தில் பொதுமக்கள் அலட்சியமாக இருந்தால் கரோனா அதிகரிக்கும் அபாயம் உள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

இதுகுறித்து உலக சுகாதார அமைப்பின் தென்கிழக்கு ஆசிய பிராந்தியத்தின் இயக்குநர் டாக்டர் பூனம் கேத்ரபால் சிங் கூறுகையில், "சமீபத்திய வாரங்களில் கரோனா பரவல் குறைந்துள்ளதை பார்த்து நாம் மனநிறைவு அடையக்கூடாது.

சரியான நேரத்தில் கரோனாவை கண்டறிதல், சோதனை செய்தல், அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களைக் கண்டறிதல், பாதிக்கப்பட்டவர்களை தனிமைப்படுத்துதல் மற்றும் தேவைப்படுபவர்களுக்கு மருத்துவமனை பராமரிப்பை வழங்குவதற்கான வசதிகளை உறுப்பு நாடுகள் ஒருங்கிணைந்த முயற்சிகளின் மூலம் மேற்கொண்டு வருகின்றன.

கரோனா பரவலை முடிந்தவரை குறைக்க அனைத்து நடவடிக்கைகளையும் நாம் எடுக்க வேண்டும். நமது முயற்சிகளும் தொடர வேண்டும்” என்றார்.

இதையும் படிங்க: பண்டிகை காலத்தை முன்னிட்டு 196 சிறப்பு ரயில்கள் இயக்கம்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.