ETV Bharat / bharat

கோவிட்-19 தொற்றால் வேலைவாய்ப்பு எவ்வாறு பாதிக்கிறது? - கரோனா வைரஸ் வேலைவாய்ப்பு

டெல்லி: கரோனா வைரஸ் ஏற்படுத்திய அதிர்ச்சியானது உலகப் பொருளாதாரத்தின் மீது விழுந்த ஒரு பேரிடியாக, அதை மந்த நிலைக்கு இட்டுச் சென்றுள்ளது. மாற்று மருந்தும்கூட பெரிய பொருளாதார இழப்பை உண்டாக்கும் என்பதால், இந்தக் கொள்ளை நோயை முன் எச்சரிக்கையாக முடக்குவது போன்றவை மூலம் சமாளிக்க வேண்டும்.

employment
employment
author img

By

Published : Mar 23, 2020, 3:43 PM IST

Updated : Mar 23, 2020, 8:21 PM IST

பாதுகாப்புக்காகவும் வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்தவும் 130 கோடி இந்தியக் குடிமக்களையும் வீட்டுக்கு உள்ளேயே இருக்குமாறு இந்திய அரசு பாரிய நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது. அதன் ஒரு பகுதியாகவே இம்மாதத் தொடக்கத்தில் விமான சேவை, போக்குவரத்து, பொழுதுபோக்கு மற்றும் பல செயல்பாடுகளுக்கும் சேவைகளுக்கும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன.

மோசமான ஒரு நேரத்தில் இந்த அதிர்ச்சி வந்திருக்கிறது; ஏற்கெனவே மூன்று ஆண்டுகளாக நாட்டின் பொருளாதார வளர்ச்சி குறைந்து வருகிறது; நிதித் துறைக் கட்டமைப்பு பலவீனமாகவும் பாதிக்கப்படக்கூடிய வகையிலும் இருக்கிறது. அரசு, தனியார் நிதி அல்லாத மற்றும் வீட்டு வசதித் துறைகள் ஆகியவை கடன் சுமையில் சிக்கியுள்ளன.

பெரிய அளவிலான வர்த்தகத் தொழில் முடக்கத்துக்குத் தர வேண்டிய விலையானது, பாரிய அளவினதாகவும் கற்பனை செய்து பார்க்க முடியாததாகவும் இப்போது உள்ளது. ஆனால் இது அதிகமான பாதிப்பை உண்டாக்கினாலும் உடனடியாகப் புதிய சூழலானது கட்டுப்படுத்தப்படுகிறது; எனவே, இது தற்காலிகமானதே என ஊகிப்பதற்கான நியாயமும் இருக்கிறது.

பேரபாயத்தை விளைவிக்கும் ஒரு கொடிய நோயை எதிர்த்துப் போராடுவதற்கு அரசானது தூண்டப்பட்டு இருக்கிறது. இப்படியான மந்த நிலையிலிருந்து மீள்வதற்கான பூமராங் போன்ற வாய்ப்புகள் அதிகமாக உள்ளன. ஆனால் இப்போதைய அன்றாட வாழ்க்கைச் செயல்பாடுகள், சேவைகளுக்கு மத்தியில் இந்தப் பெருங்கொள்ளை நோயானது இன்னும் சிறிது காலத்துக்குத் தொடருமானால், பொருளாதார அழிவானது மிகப் பெரிய அளவினதாக இருக்கும். அதனால் வரக்கூடிய இழப்புகள் நிரந்தரமானதாகவும் மாறிவிடக் கூடும்.

அதிகாரப்பூர்வமாக அரசு தரப்பால் ஏற்றுக் கொள்ளப்படவில்லை என்கிற போதும், நாட்டில் இரண்டு ஆண்டுகளுக்கு முன் இருந்த நிலவரப்படி, வேலையில்லா திண்டாட்டமானது 45 ஆண்டுகளில் உச்சபட்சமாக இருந்தது என்று தேசிய மாதிரி கணக்காய்வு அமைப்பு (என்.எஸ்.எஸ்.ஓ.) தெரிவித்திருந்தது.

ஆலைகள், வர்த்தகச் செயல்பாடுகள், எண்ணில் அடங்காத சேவைகளின் முடக்கத்தால், நுகர்வோரின் தேவையும் குறைந்துபோய் இருக்கிறது. இதனால் வேலைவாய்ப்பானது இரண்டு முனைகளில் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. துரதிருஷ்டவசமாக இந்தியாவானது இதில் கடுமையாகப் பாதிக்கப்படக் கூடியதாக இருக்கிறது. அதாவது, வேலைவாய்ப்பில் ஐந்தில் இரண்டு பங்கு அளவு முறைப்படுத்தப்படாத தன்மை உடையவை ஆகும். வீட்டு வேலை, அன்றாடக் கூலித் தொழில் போன்ற கணிசமான எண்ணிக்கையிலான வேலைகள் பெரும்பாலும் ஆவணம் இல்லாத ஒப்பந்தப் பணிகள், குறைந்த உற்பத்தித் திறனைக் கொண்ட வணிகம், சில்லறை விற்பனை, பழுதுநீக்கம், தனிப்பட்ட சேவைகள் போன்றவற்றில் ஈடுபடக்கூடிய சுயதொழில்கள் ஆகியவை மூலமே நாட்டின் மொத்தச் சேவைகளில் சராசரியாக 54 விழுக்காடு அளவுக்கு நடக்கின்றன.

சில தொழில்களில் முடக்கத்தின் விளைவானது மிகவும் அதிகமாக உள்ளது. குறிப்பாக இதில் பெரும் பங்கு அன்றாட ஊதியத்தையும் பணப் புழக்கத்தையும் சார்ந்துள்ளவர்களுக்கு அதிக பாதிப்பாகும். ஏனென்றால், ஒப்பந்தப் பணியாக இருந்தாலும் கூட இயல்பாகவே பலவீனமாக உள்ள சிறு, குறு, நடுத்தரத் தொழில்களுடன் தொடர்புடையவையாகவே இந்த வேலைகள் இருக்கின்றன. இப்படி கோவிட்-19ஐ எதிர்த்துப் போராடுவதானது வேலைவாய்ப்புகளில் தீவிரமான, பாதகமான தாக்கங்களை அதிகரித்துள்ளது. இந்த உடனடி விளைவு நோக்கில் பார்த்தால், அன்றாடக் கூலி பெறுவோர், ஊதியக்காரர்களின் வருமானமானது கடும் பாதிப்பை எதிர்கொண்டுள்ளது.

நிறுவனங்கள் விரைவில் இந்த நிலைமை மாறி வழமைக்குத் திரும்பிவிடும் என்கிற நம்பிக்கையில், செலவினக் குறைப்பு, வேலைநீக்கம் ஆகியவற்றை இடைநிறுத்தி வைக்கலாம். இருந்தாலும் ஊதியக் குறைப்புக்கு வாய்ப்பில்லை என்பதற்கான உறுதி எதுவும் இல்லை. விற்பனை, வருவாய், பணப்புழக்கம் ஆகியவை நெருக்கடிக்கு உள்ளானால், ஊதியத்தில் அது எதிரொலிக்கும்.

இந்த நிறுத்தங்கள் தொடர்ந்து நீடிக்குமானால் வேலைவாய்ப்பு நிலைமை மோசமடையும். தற்காலிக வேலை இழப்புகள், ஊதியம், வருமானம், பணமீட்டல் ஆகியவற்றில் ஏற்பட்டுள்ள பகுதியளவிலான குறைவானது, ஒரு கட்டத்தில் வேலைவாய்ப்பில் நிரந்தரமான ஒரு சரிவை நோக்கி உறுதியாக நகரக்கூடும். ஏனென்றால் பலவீனமாகவும் பாதிக்கப்படக் கூடியதாகவும் உள்ள தொழில், வர்த்தக நிறுவனங்கள் தங்களின் தொடரும் பணப்புழக்க நெருக்கடியை முடிவுக்குக் கொண்டுவந்து அதிலிருந்து மீளும் வாய்ப்பைக் குறைவாகவே கொண்டுள்ளன. இந்த நிலையானது திவாலாகும் நிலைக்கும் தொழிலை மூடிவிடவும் செயற்பாடுகளைக் குறைக்கும் அளவுக்கும் கொண்டுபோய் விடும். அதாவது, தனி நபர்களின் நெருக்கடியான நிலையைப் போல ஆகிவிடும்.

இதில் ஆரம்பக் கட்டமும் முக்கியமானது. ஏனென்றால், இந்தத் தொழில் முடக்கமானது ரொம்ப காலத்துக்கு நீடிக்கும் என்றால் தற்காலிகமான மந்த நிலை கூட வரக்கூடிய வேலைவாய்ப்புகளுக்கு மோசமான அறிகுறியாகும். இப்படி ஒப்பீட்டளவில் குறுகிய காலத்துக்கு நீடிக்கும் தற்காலிகமான கோவிட்-19 பாதிப்பு, சிறந்த உதாரணமாக இருந்தாலும், வேலைவாய்ப்பைப் பொறுத்தவரை பெரும் இக்கட்டான நிலையைத் தருவதாகும். ஏற்கெனவே ஊரக மற்றும் நகரப் பகுதிகளில் வேலைவாய்ப்புக்கான குரல்கள் அதிகரித்துவரும் நிலையில் அதை மேலும் நசுக்கக் கூடியதாகவே இந்த நிலை காணப்படுகிறது.

என்னதான் தீர்வு?

நிலைமையானது மிக வேகமாக மாறிக்கொண்டு வருகிறது. பொருளாதாரச் சூழலில் நிச்சயமற்ற தன்மையை அதிகரிப்பதாக இருக்கிறது. வேலைவாய்ப்பு, ஊதியம், வருமானம் ஆகியவற்றில் ஒரு தற்காலிகமான வீழ்ச்சி ஏற்பட்டிருப்பது பளிச்செனத் தெரிகிறது. நிதியிலான எதிர்வினையை இது வலியுறுத்துகிறது. ஏனெனில் கடன், வட்டிவீதம் ஆகியவற்றோடு தொடர்பில்லாத இந்தப் பிரிவுகளில் பணரீதியிலான கொள்கைகள் இவற்றில் எந்த விளைவையும் உண்டாக்காது.

கரோனா வைரசுக்கு எதிரான போரானது பொருளாதாரத் தளத்திலும் சம அளவு வீரியத்துடன் மேற்கொள்ளப்படவேண்டும். நிதிரீதியிலான முதல்கட்டத் தலையீடானது அரசாங்கத்திடமிருந்து வருவாய்க்கான துணைதரவாக வரவேண்டும்.

இது உடனடியானதாகவும் அவசரமானதாகவும் இருக்க வேண்டும். சில மாநில அரசுகள் வருவாய் இழப்புக்கு ஈடுசெய்ய திட்டங்களை அறிவித்திருப்பது நல்லது. எடுத்துக்காட்டாக, கேரள அரசின் ரூ.20 ஆயிரம் கோடி திட்டம், 35 இலட்சம் தொழிலாளர்கள் மற்றும் கட்டடப் பணியாளர்களுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்குவதாக உத்தரப்பிரதேச அரசு அறிவித்திருப்பது, 8.5 இலட்சம் பயனாளிகளுக்கு 5 ஆயிரம் ரூபாய் உதவித்தொகை வழங்குவதான டெல்லி அரசின் அறிவிப்பு ஆகியவற்றைக் குறிப்பிடலாம். மைய அரசாங்கமானது தன்னுடைய பங்கை ஆற்றுவதற்காகக் காத்துக்கிடந்து நேரத்தை வீணடிக்கக் கூடாது.

(இரேணு கோலி, புது டெல்லியைச் சேர்ந்த பொருளியலாளர். கருத்துகள் அவருடையவையே)

இதையும் படிங்க: தாண்டவமாடும் கரோனா: தமிழ்நாட்டில் நகைக்கடைகள் அனைத்தும் 31ஆம் தேதிவரை மூடல்

Last Updated : Mar 23, 2020, 8:21 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.