சீக்கிய குரு குருநானக் தேவ் தனது கடைசிக் காலத்தை கர்தாப்பூரில் கழித்தார். இந்தியாவிலிருந்து பாகிஸ்தான் பிரிக்கப்பட்ட போது, அப்பகுதி பாகிஸ்தான் வசம் சென்றது. குருநானக் வாழ்ந்து மறைந்த இடமென்பதால் கர்தாப்பூர் குருத்வாராவை சீக்கியர்கள் தங்களின் முதன்மை புனித தலமாக கருதி வருகின்றனர்.
இந்த பகுதியை இணைக்கும் விதமாக, குருதாஸ்பூரிலிருந்து கர்தாப்பூருக்கு சாலை வழித்தடம் அமைக்கப்பட்டது. குருதாஸ்பூர் சாலை பணிகளை இந்தியாவும், கர்தாப்பூர் பணிகளை பாகிஸ்தானும் அமைத்துள்ளன.
இந்த சாலை திறப்பு விழா வரலாற்று சிறப்புமிக்க நாளான கடந்த 9ஆம் தேதி (மேற்கு, கிழக்கு ஜெர்மனி இணைந்த தினம்) நடந்தது. இதில் பிரதமர் நரேந்திர மோடி, பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் ஆகியோர் கலந்து கொண்டனர்.
முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கும் விழாவில் கலந்துக் கொண்டு சிறப்பித்தார். குர்தாஸ்பூர்- கர்தாப்பூர் இடையே சாலை யாத்ரீகர்கள் பயன்பாட்டுக்கு திறக்கப்பட்டதும், பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான், பஞ்சாப் முதலமைச்சர் கேப்டன் அமரீந்தர் சிங் ஆகியோர் பேருந்தில் பயணம் செய்தனர்.
இந்த பயணம் வெறும் ஐந்து நிமிடங்களே நீடித்தது. இருப்பினும் இம்ரான் கானுடன், கேப்டன் அமரீந்தர் சிங் முகமலர்ச்சியுடன் சிரித்து பேசிக்கொண்டு இருந்தார். இம்ரான் கான் முகத்திலும் அந்த மலர்ச்சியை காண முடிந்தது. தற்போது அவர்கள் என்ன பேசினார்கள் என்பது குறித்த கேள்விக்கு பதில் கிடைத்துள்ளது.
இதையும் படிங்க: கர்தார்பூர் புனிதப் பயணம்: கட்டணத்தை கைவிட பாகிஸ்தானுக்கு இந்தியா வலியுறுத்தல்