மேற்குவங்க மாநிலத்தின் பிர்பம் மாவட்டத்தில் மல்லர்புர் பகுதியில் காவல் துறையின் காவலில் இருந்த 15 வயது சிறுவன் மரணம் அடைந்தான்.
இது குறித்து காவல் துறையினர் கூறுகையில், கடந்த வியாழக்கிழமை இரவு மல்லர்புர் காவல் நிலைய கழிவறையில் சிறுவன் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்ட நிலையில் கண்டெடுக்கப்பட்டான்.
அந்தச் சிறுவனின் பெற்றோர் பாஜக ஆதரவாளர்கள் என்பதால் காவல் துறையினர் அடித்தே கொன்றுள்ளனர் என பாஜகவினர் குற்றஞ்சாட்டினர். மேலும், இதனைக் கண்டித்து மல்லர்புர் பகுதியில் 12 மணி நேர முழு அடைப்புக்கு அழைப்புவிடுத்திருந்தனர்.
ஆனால், இறந்த சிறுவனின் தந்தை தான் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியைச் சார்ந்தவன் என்றும் தனது மகன் தற்கொலை செய்துகொண்டே இறந்தான் என்றும் கூறியுள்ளார்.
முன்னதாக வெள்ளிக்கிழமையன்று, இந்தச் சம்பவத்தால் கொதிப்படைந்த பொதுமக்கள் காவல் நிலையம் மீது தாக்குதல் நடத்த முயன்றனர். அப்போது, அங்கிருந்து செல்ல முயன்ற காவலர்கள் மீதும் கற்களை வீசினர்.
காவல் துறை மூத்த அலுவலர் ஒருவர் கூறுகையில், "இந்த வழக்கு குறித்து நீதித் துறை நடுவர் விசாரணை மேற்கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளது. மனித உரிமைகள் ஆணையம் வகுத்துள்ள வழிகாட்டுதலின்படி மருத்துவமனை உடற்கூராய்வு மேற்கொண்டுள்ளது" என்றார்.
காவலில் இருந்த சிறுவன் மரணம்: முழு அடைப்புக்கு அழைப்புவிடுத்த பாஜக!
கொல்கத்தா: மேற்குவங்கத்தின் மல்லர்புர் பகுதியில் 15 வயது சிறுவன் காவல் நிலையத்தில் மரணம் அடைந்துள்ள நிலையில், இதைக் கண்டித்து பாஜகவினர் 12 மணி நேர முழு அடைப்புக்கு அழைப்புவிடுத்தனர்.