இது குறித்து டெல்லியில் பேசிய ராவத், “இந்திய பாதுகாப்புப்படை தொழில்நுட்ப அரவணைப்பில் முன்னணியில் இருக்க வேண்டும். இந்திய தொழில்நுட்பங்களுடன் எதிர்கால யுத்தங்களை வெல்வோம். ஒரு தற்சார்பு இந்திய தொழில் துறையை வளர்ப்பதில் நாம் வெற்றிபெறுவோம் என்று நான் நம்புகிறேன்.
அந்த வகையில் எதிர்கால போர்களை நாம் வெல்வோம். நமது தொழில்நுட்பத்தில் தற்சார்புமயமாக்கல் (அதாவது உள்நாட்டு உற்பத்தி) தேவை. மூடிய அமைப்பில் பாதுகாப்புப்படை இனி இயங்காது. எங்கள் கதவுகள் திறந்திருக்கும்.
எங்கள் பாதுகாப்புப்படையில் கல்வியாளர்களுக்கும், ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பிற்கும் திறந்திருக்கும். தரையில் உள்ள வீரனுக்கு சிறந்த முறையில் செயல்பட தொழில்நுட்பம் எவ்வாறு தேவைப்படுகிறது என்பதையும் பார்க்க வேண்டும். வருங்காலங்களில் இரட்டை பயன்பாட்டு தொழில்நுட்பங்களை உருவாக்குவது நல்லது. இரட்டை பயன்பாட்டு தொழில்நுட்பங்கள் காலத்தின் தேவை” என்றார்.
இதையும் படிங்க : பயங்கரவாதத்திற்கும் மதத்திற்கும் தொடர்பில்லை: பிபின் ராவத்