மத்திய அரசு மகாத்மா காந்தி ஊரக வேலை வாய்ப்பு திட்டம், மாநில அரசின் நிதியை உயர்த்துவதற்கு கடன் வாங்கும் விழுக்காட்டை 5ஆக உயர்த்தி அறிவித்ததை வரவேற்பதாகவும், மற்றபடி மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்த நிதி திட்டங்களில் எதுவும் இல்லை என புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக புதுச்சேரி சட்டப்பேரவை வளாகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், "மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தொடர்ந்து 5 நாட்களாக பிரதமர் அறிவித்த ரூ. 20 லட்சம் கோடிக்கான திட்டத்தை அறிவித்துள்ளார். அவர் கூறிய அனைத்து அம்சங்களையும் நாம் பார்க்கும்போது, குறிப்பாக ராணுவ தளவாடங்கள் தயாரிக்கும் தொழிற்சாலை பொதுத்துறையும், தனியார் துறையும் இணைந்து செயல்படும் ஒரு திட்டத்தை கொண்டு வந்துள்ளார்.
இதன் மூலம் அனைத்தையும் தனியார் மயமாக்கும் ஒரு நிலையை மத்திய அரசு இப்போது செயல்படுத்த முனைந்துள்ளது. ரகசியமாக இருக்க வேண்டிய சில துறைகளைக்கூட தனியாரிடம் ஒப்படைக்கும் நிலையை உருவாக்கியுள்ளனர். இது ஜனநாயகத்துக்கு உகந்ததல்ல. ஆனாலும் சில துறைகளில் அவர்கள் அறிவித்துள்ளதை எப்படி மக்களிடம் கொண்டுச் செல்ல போகின்றனர் என்பதை மத்திய அரசு கூறவில்லை.
குறிப்பாக விவசாயிகளுக்கு அறிவிக்கப்பட்டிருப்பது எந்த காலத்தில் அவர்களுக்கு சென்று சேரும் என்பது குறிப்பிடப்படவில்லை. இப்படி பல குளறுபடிகள் அந்த அறிவிப்பில் இருக்கின்றன" என்றார்.
இதையும் படிங்க: தனியார் மயமாக்கம் ஜனநாயகத்துக்கு அழகல்ல - புதுச்சேரி முதலமைச்சர்!