திருமணம் என்றாலே உறவினர்கள், நண்பர்கள் எனப் பெரும் பட்டாளமே ஒன்றுகூடி நடத்துவது வழக்கம். சுமார் மூன்று நாள்கள் ஆடல், பாடல் என ஆர்ப்பரிக்கும் திருமண வீடுகள், தற்போது கரோனாவால் முடங்கியுள்ளன.
ஊரடங்கு காலகட்டத்தில் விதித்த கட்டுப்பாடுகளின் அடிப்படையில்தான் திருமணம் நடைபெற வேண்டும் என மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. அதன்படி, பல்வேறு திருமணங்கள் மணப்பெண் வீட்டு சார்பாக 6 நபர்கள், மணமகன் வீட்டு சார்பாக 6 நபர்கள் மட்டுமே கலந்துகொண்டு நடைபெற்றன.
அந்த வகையில், ஆந்திராவில் கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் ஆசிரியராகப் பணியாற்றி வருபவர், கோவூரி சத்தி ரெட்டி. இவரது மகன் கிரணுக்கும், லட்சுமி என்ற பெண்ணுக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டிருந்தது.
இவர்கள் திருமணத்தைக் காட்டிலும் சமூக அக்கறையைக் கருத்தில் கொண்டு திருமணத்திற்கு வந்த அனைவருக்கும் மணமகன், மணப்பெண் பெயர்கள் அச்சிடப்பட்ட முகக்கவசங்களை வழங்கி, அணிந்து கொள்ளுமாறு அறிவுறுத்தினர்.
மேலும், மாஸ்க் வாங்குவதற்கு பணம் இல்லாத மக்களுக்கும்; மாஸ்க் வழங்கி அனைவர்களின் பாராட்டுகளையும் பெற்றனர்.
இதையும் படிங்க: காதல் திருமணத்திற்கு எதிர்ப்பு: தற்கொலை செய்த தம்பதி!