உத்தரப் பிரதேச மாநிலம் வாரணாசியில் பாஜகவில் உறுப்பினர்களை சேர்க்கும் நிகழ்ச்சி நடந்தது. அதில் பங்கேற்ற பிரதமர் நரேந்திர மோடி பேசுகையில்,
"ஐந்து லட்சம் கோடி மதிப்புள்ள பொருளாதாரத்தை அடைவது குறித்து பொதுமக்கள் புரிந்து கொள்ள வேண்டும். ஆங்கிலத்தில் ஒரு பழமொழி உண்டு.
அதை அடைவதற்கான அனைத்து திட்டங்களும் நம் நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்டுள்ளன. அடுத்த ஐந்தாண்டுகளில் நாம் ஐந்து லட்சம் கோடி மதிப்புள்ள பொருளாதாரத்தை அடைவோம்.
குடிநீரை தேவையில்லாமல் வீணடிப்பது தான் தற்போது முக்கிய பிரச்னையாக உள்ளது. எனவே, பாசன வசதிக்காக இருந்தாலும் சரி, வீட்டு உபயோகத்திற்காக இருந்தாலும் சரி தண்ணீரை வீணடிக்க கூடாது" என்றார்.