டெல்லியியைப் பொறுத்தமட்டில் வெங்காயம் விலை கடுமையாக உயர்ந்து வருகிறது. இந்த விலையேற்றம் அங்கு வாழும் நடுத்தர மக்களை கவலை கொள்ள செய்துள்ளது. இந்த கவலையை போக்க ஆம் ஆத்மி அரசாங்கம் புதுமுயற்சியில் இறங்கி உள்ளது. அதன்படி முதல்கட்டமாக ஒரு கிலோ வெங்காயம் ரூ.23.90 காசுகளுக்கு விற்பனை செய்யப்பட உள்ளது. இந்த திட்டத்தை நேற்று முன்தினம்(28.09.19) அரவிந்த் கெஜ்ரிவால் கொடி அசைத்து துவங்கி வைத்தார்.
இந்த தகவலை அம்மாநில முதல் அமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் டுவிட்டரில் தெரிவித்துள்ளார். அதில், ''வெங்காய விலையேற்றத்தை கவனத்தில் கொண்டு 70 நடமாடும் வெங்காய வேன்கள் அறிமுகப்படுத்தப்பட உள்ளது என்றும் டெல்லியில் உள்ள 400 ரேஷன் கடைகளிலும் வெங்காயம் இதே விலைக்கு கிடைக்கும்'' என்றும் அவர் கூறியுள்ளார்.
மேலும்¸ 'வெங்காயம் வேண்டுமா? கண்ணீர் சிந்த வேண்டாம்¸ எளிதாக உங்கள் பாக்கெட்டுகளை நிரப்பி செல்லுங்கள் என்றும் கெஜ்ரிவால் கூறியுள்ளார்.
வட இந்தியாவை பொறுத்தமட்டில் வெங்காயம் மற்றும் உருளைக்கிழங்கு அவர்களின் பிரதான உணவு. இதில் அவர்கள் சமரசம் செய்துக் கொள்ள மாட்டார்கள்.
கடந்த காலங்களில் வெங்காயம் விலை அதிகரித்ததால்¸ ஆட்சி மாற்றம் கூட ஏற்பட்டு உள்ளது.
வெங்காய விலையேற்றம் ஆட்சி மாற்றத்தின் அறிகுறி என்றும் அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர். இந்த நிலையில் அரவிந்த் கெஜ்ரிவால் அரசு வெங்காய விலையேற்றத்தை கட்டுக்குள் வைக்க நடவடிக்கை எடுத்துள்ளது.
டெல்லியில் கடந்த வாரம் வெங்காயம் கிலோ ரூ.60 முதல் ரூ.80 வரை விற்பனையானது. தொடர்ந்து கொள்முதல் விலை அதிகரிப்பால்¸ சில்லறை விலை மேலும் அதிகரிக்கும் சூழல் தென்பட்டது. இந்த நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையை ஆம் ஆத்மி அரசு கையில் எடுத்து உள்ளது.
டெல்லியில் அடுத்த ஆண்டு மே மாதத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது நினைவு கூறத்தக்கது.
இதையும் படிங்க: