ETV Bharat / bharat

தகுந்த இடைவெளியை கடைப்பிடிப்பதே ஒரே வழி - பிரதமர் நரேந்திர மோடி - இந்தியாவில் கரோனா தொற்று

டெல்லி: கோவிட்-19 தொற்றுக்கு தடுப்பு மருந்தைக் கண்டுபிடிக்கப்படும்வரை தகுந்த இடைவெளியை நாம் கடைப்பிடிக்க வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Narendra Modi
Narendra Modi
author img

By

Published : Jun 26, 2020, 3:46 PM IST

கோவிட்-19 பரவலைக் கட்டுப்படுத்த நாடு முழுவதும் மார்ச் 25ஆம் தேதி முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இந்த ஊரடங்கால் வேலையிழந்த குடிபெயர்ந்த தொழிலாளர்கள் நடை பயணமாகவும் ரயில்கள் மூலமும் தங்கள் சொந்த மாநிலத்திற்கு திரும்பினர்.

அப்படி உத்தரப் பிரதேசத்திற்கு திரும்பிய குடிபெயர்ந்த தொழிலாளர்களுக்கு வேலை அளிக்கும் நோக்கத்தில் "ஆத்மா நிர்பர் உத்தரப் பிரதேச ரோஜ்கர் அபியான்" என்ற திட்டத்தை அம்மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் அறிவித்துள்ளார்.

இத்திட்டத்தை இன்று பிரதமர் நரேந்திர மோடி காணொலி காட்சி வழியே தொடங்கி வைத்தார். அப்போது பேசிய மோடி, "நாம் அனைவரும் வாழ்வில் ஏற்ற இறக்கங்களைச் சந்தித்துள்ளோம். பொது வாழ்க்கையிலும் நாங்கள் பிரச்னைகளை எதிர்கொண்டுள்ளோம். ஆனால், மொத்த உலகமும் ஒரே நேரத்தில் இப்டியொரு பிரச்னையை எதிர்கொள்ளும் என்று யாரும் நினைத்ததில்லை.

இதனால் எல்லோரும் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த நோயிலிருந்து நாம் எப்போது மீண்டுவருவோம் என்று நமக்கு தெரியாது. இந்தத் தொற்றுக்கு இதுவரை தடுப்பு மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை. இருப்பினும், ஒரு விஷயம் நமக்கு தெரியும். இரண்டு கெஜ தூரம் இடைவெளியைக் கடைப்பிடிப்பதும் முகக்கவசம் அணிவதும் கரோனா வைரசிலிருந்து நம்மை பாதுகாக்கும்" என்றார்.

தொடர்ந்து இத்திட்டம் குறித்து பேசிய மோடி, "உங்கள் வேலையின் திறனை இன்று நான் உணர்கிறேன். 'பிரதான் மந்திரி கரிப் கல்யாண் ரோஜ்கர் அபியான்' திட்டம் என்பது பொதுமக்களின் வேலை திறனையே அடிப்படையாகக் கொண்டது. இதுவே இந்த 'ஆத்மா நிர்பர் உத்தரப் பிரதேச ரோஜ்கர் அபியான்' திட்டத்திற்கு தேவையான உத்வேகத்தை அளித்துள்ளது.

உத்தரப் பிரதேசத்தைப் போலவே மற்ற மாநிலங்களிலும் இதுபோன்ற திட்டங்களை உருவாக்கும் என்று நான் நம்புகிறேன். கரோனாவால் ஏற்பட்டுள்ள இந்த நெருக்கடியான காலகட்டத்தில் உத்தரப் பிரதேச மாநிலம் சில துணிச்சலான நடவடிக்கைகளை எடுத்துள்ளது. கரோனா பரவலைக் கட்டுப்படுத்துவதில் உத்தரப் பிதேசம் வெற்றி கண்டுள்ளது" என்றார்.

பிரதமர் மோடி இன்று தொடங்கி வைத்த "ஆத்மா நிர்பர் உத்தரப் பிரதேச ரோஜ்கர் அபியான்" திட்டத்தின் மூலம் 1.25 கோடி குடிபெயர்ந்த தொழிலாளர்கள் பயன்பெறுவார்கள் என்று எதிர்பாக்கப்படுகிறது.

இதையும் படிங்க: 'காங்கிரஸ், சீனா இடையே ரகசிய உறவு'- ஜே.பி. நட்டா

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.