மேற்கு வங்கத்தில் நிலவும் சட்ட ஒழுங்கு பிரச்னை குறித்து விவாதிக்க அம்மாநில ஆளுநர் ஜகதீப் தங்கர் வரும் வெள்ளிக்கிழமை உள் துறை அமைச்சர் அமித் ஷாவை சந்திக்கவுள்ளார். முன்னதாக, கடந்த வாரம் கொல்கத்தாவில் நடைபெற்ற பேரணியில் பங்கேற்ற அமித் ஷா, மேற்கு வங்கத்தில் நிலவும் சட்ட ஒழுங்கு குறித்து கவலை தெரிவித்தார்.
இது குறித்து ராஜ்பவன் வெளியிட்டுள்ள அறிக்கையில், "உள் துறை அமைச்சருடனான இந்தச் சந்திப்பில் மாநிலத்தில் நிலவும் முக்கியப் பிரச்னைகள் குறித்து ஆளுநர் விவாதிக்கவுள்ளார். உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டிய சிக்கல்கள் குறித்தும் ஆளுநர் அவருக்கு விளக்குவார்" என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்தாண்டு ஜூலை மாதம் மேற்கு வங்க ஆளுநராக ஜகதீப் தங்கர் நியமிக்கப்பட்டார். அப்போது முதல் மம்தா தலைமையிலான மேற்கு வங்க அரசுக்கும் ஆளுநருக்கும் மோதல்போக்குத் தொடர்ந்துவருகிறது.
ஆளுநரின் இந்தச் சந்திப்பு குறித்துக் கருத்துத் தெரிவிக்க மறுத்த திரிணாமுல் காங்கிரஸ் கட்சி, பாஜக முதலில் டெல்லியின் சட்ட ஒழுங்கை பாதுகாக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்தார்.
இதையும் படிங்க: நாட்டின் உயரிய விருதை பெற்றுக்கொடுத்த நாட்டுப்புற கவிதை - சாதனை பெண்மணி சாந்தி