வட மாநிலங்களில் பெய்த கனமழையால் இமாச்சலப் பிரதேசம், உத்தரகாண்ட் உள்ளிட்ட பல மாநிலங்களில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. இதன் விளைவால் பல்வேறு இடங்களில் சாலைப் போக்குவரத்து முற்றிலும் பாதிக்கப்பட்டது. மேலும், பல இடங்களில் மண்சரிவு ஏற்பட்டது. மேலும், பல கிராமங்களில் வெள்ளநீர் புகுந்து பலர் உயிரிழந்தனர்.
இந்நிலையில் டெல்லியில் உள்ள யமுனை நதிக்கரையில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் நதியின் அபாய அளவான (முழு அளவு) 205.33 மீட்டர் உயரத்தையும் தாண்டி வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் அங்கு 10 கிராமங்களுக்குள் வெள்ளநீர் புகுமென அபாய எச்சரிக்கை விடப்பட்டது. மேலும், கரையோரங்களில் வசிக்கும் மக்கள் பத்திரமாக வேறு இடங்களில் தங்கவைக்கப்பட்டனர்.
இந்தச் சூழலில் இன்று வெள்ள நீரானது அபாயக் கட்டத்தின் அளவான 205.33 மீட்டரிலிருந்து 0.38 மீட்டர் குறைந்து 204.95 மீ., அளவில் தற்போது ஓடுகிறது. இதனால் மக்கள் அச்சப்பட வேண்டாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.