மத்தியப் பிரதேச மாநிலத்தில் ஜபல்பூர்-நர்சிங்பூர் நெடுஞ்சாலையில் கார்கள் மோதியதில் இரண்டு பேர் காயமடைந்தனர். இந்தச் சம்பவம் இன்று (ஜூன் 10) அதிகாலையில் பெடகாட் காவல் நிலையம் அருகே நடந்தது. நேர் எதிரே வந்த கார் ஒன்று கட்டுப்பாட்டை இழந்ததால், மற்றொரு கார் மீது மோதி, இந்த விபத்து ஏற்பட்டது.
இந்நிலையில் உள்ளூர்வாசிகள் காயமடைந்தவர்களை சிகிச்சைக்காக அருகிலுள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். இந்த விபத்து குறித்து யார் மீதும் வழக்குப் பதிவு செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த முழு விபத்தும் அருகில் உள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகி உள்ளதால், இதனை வைத்து காவல் துறையினர் விசாரணை செய்து வருகின்றனர்.