குஜராத் மாநிலம் வதோதரா மாவட்டத்திலுள்ள ராஜ்மஹால் சாலை அருகே திறந்த வெளியில் முதலை ஒன்று சுற்றித்திரிவதாக அப்பகுதி மக்கள் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.
தகவலையடுத்து குஜராத் விலங்குகளுக்கான கொடுமையைத் தடுக்கும் சங்கத்தினருடன் சம்பவ இடத்திற்கு வனத்துறையினர் வந்தனர். அதன்பின், அங்கிருந்த நற்காலி அருகே படுத்திருந்த ஐந்து அடி நீளம் கொண்ட முதலையை வனத்துறையினர் பத்திரமாக மீட்டனர்.
இது குறித்து ஜிஎஸ்பிசிஏ நிறுவனர் ராஜ் பாவ்சர் கூறுகையில், “ராஜ்மஹால் பகுதியில் வசிப்பவர்களிடமிருந்து காலை 6 மணியளவில் எங்களுக்கு ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது. அதில் நான்கு முதல் ஐந்து அடி நீளமுள்ள முதலை ஒன்று பொது வெளியில் சுற்றித்திரிவதாக தெரிவித்தனர். இதையடுத்து, நங்கள் சம்பவ இடத்திற்கு வந்து ஐந்து அடி நீளமுள்ள முதலை பத்திரமாக மீட்டு, வனத்துறையினரிடம் ஒப்படைத்தோம்.
மேலும் மழைக்காலம் காரணமாக, காட்டு விலங்குகள் திறந்த வெளியில் வரக்கூடும். அதனால் பொதுமக்கள் தங்கள் பகுதிகளில் வனவிலங்கள் நடமாட்டத்தைக் கண்டால் உடனடியாக எங்களது 24 மணி நேர உதவி எண்களான 9825011117 மற்றும் 9825711118 தொடர்பு கொள்ளுங்கள்” என்று தெரிவித்தார்.
இதையும் படிங்க:எல்கேஜி மாணவர்களுக்கு ஆசிரியரான ஆறு வயது சிறுமி!