ETV Bharat / bharat

கில்ஜித்-பல்திஸ்தான் தேர்தல்... இந்தியா-பாகிஸ்தான் இடையே நிலவும் போர் மேகம் - சீன வியூக நிபுணர் லியு சோங்கி

ஏப்ரல்-மே முதல் இந்தியாவிற்கும் சீனாவிற்கும் இடையிலான மோதல் மற்றும் பதற்றம்  அதிகரித்ததிலிருந்து பாகிஸ்தான் அமைதியாக இருந்தது பலருக்கு புதிராக இருந்தது, ஆனால் இப்போது அது தெளிவாகிவிட்டது. பாகிஸ்தான் தனது முதல் பெரிய நகர்வை நவம்பரில் மேற்கொள்ளவுள்ளது. நவம்பர் 15ஆம் தேதி பாகிஸ்தானின் கில்ஜித்-பல்திஸ்தான் (GB) பிராந்தியத்தில் தேர்தல் நடைபெற உள்ளது, அதன் பிறகு GB நாட்டின் ஐந்தாவது மாகாணமாக மாற்றப்படலாம். இப்பகுதி சர்ச்சைக்குரிய பகுதியாக இருப்பதால் இந்த நடவடிக்கை இந்தியாவுடன் கடுமையான மோதலுக்கு வழிவகுக்கும் என்று மூத்த பத்திரிகையாளர் சஞ்சிப் கே.ஆர். பரூவா கூறுகிறார்

இந்தியா-பாகிஸ்தான்
இந்தியா-பாகிஸ்தான்
author img

By

Published : Sep 29, 2020, 11:00 PM IST

புதுடெல்லி: இந்தியா எதிர்கொள்ளும் இருமுனை மோதலுக்கான சாத்தியம் திடீரென்று உண்மையானதாகி வருகிறது. சீனாவின் பேச்சுகளும் நிலைப்பாடுகளும் ஏற்கனவே ஒரு மாற்றத்தைக் நோக்கி நகர்ந்து வரும் நிலையில், நவம்பர் 15க்கு பிறகு பாகிஸ்தான் சூழ்ச்சிக்கு தயாராகி வருகிறது

இந்திய விவகாரங்களில் நிபுணத்துவம் பெற்ற சீன வியூக நிபுணர் லியு சோங்கி, அதிகரித்து வரும் இந்தியா-சீனா எல்லை பிரச்னை குறித்து சனிக்கிழமையன்று சீன அரசுக்கு சொந்தமான ‘குளோபல் டைம்ஸ்’ பத்திரிகையில் எழுதியுள்ளார்.

“சீனா பதிலடி கொடுக்கவில்லை என்றால், இந்தியா-சீனா எல்லையில் அவ்வப்போது மோதல்கள் தோன்றக்கூடும், அதுவே புதிய இயல்பாக மாறக்கூடும். இந்தியா மீதான முந்தைய அணுகுமுறையையும் மனப்பான்மையையும் சீனா மறு மதிப்பீடு செய்ய வேண்டும். இந்தியாவுக்கு இது மிகவும் கடினமான நேரம் என்று அவர் பெய்ஜிங்கினால் தணிக்கை செய்யப்பட்ட அந்த கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார். லியுவின் கட்டுரை இந்தியாவுடனான சீன அரசாங்கத்தின் மோதல் போக்கை பிரதிபலிக்கிறது.

இதற்கு ஒரு நாள் முன்னதாக, பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான், தனது UNGA உரையின் போது, கடந்த ஆண்டு நிகழ்ந்த காஷ்மீர் விவகாரம் காரணமாக இந்தியாவுடன் அணுசக்தி யுத்தம் ஏற்படும் என்று அச்சுறுத்திய பின்னர், ஜம்மு-காஷ்மீர் தகராறு சர்வதேச சட்டதிட்டங்களின் அடிப்படையில் தீர்க்கப்படாவிடில் தெற்காசியாவில் நீடித்த அமைதி மற்றும் ஸ்திரத்தன்மை நீடிக்காது என்றும், ஆகஸ்ட் 5, 2019 முதல் இந்தியா மேற்கொண்ட நடவடிக்கைகளை ரத்து செய்ய வேண்டும் என்றும் கூறினார். அவரின் இந்த கூற்று இந்தியாவுக்கு எதிரான சீனாவின் மோதல் போக்கின் காரணமாக துணிவுடன் கூறியதாகத் தெரிகிறது.

ஏப்ரல்-மே முதல் இந்தியாவிற்கும் சீனாவிற்கும் இடையிலான மோதல் மற்றும் பதற்றம் அதிகரித்ததிலிருந்து பாகிஸ்தான் அமைதியாக இருந்தது பலருக்கு புதிராக இருந்தது, ஆனால் இப்போது அது தெளிவாகிவிட்டது. பாகிஸ்தான் தனது முதல் பெரிய நகர்வை நவம்பரில் மேற்கொள்ளவுள்ளது.

நவம்பர் 15ஆம் தேதி கில்ஜித்-பல்திஸ்தான் (GB) பகுதியில் தேர்தலை நடத்த பாகிஸ்தானில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது, அதன் பிறகு பஞ்சாப், சிந்து, பலுசிஸ்தான் மற்றும் கைபர் பக்துன்க்வா ஆகியவற்றுடன் GB நாட்டின் ஐந்தாவது மாகாணமாக மாற்றப்படலாம்.

பாகிஸ்தானிய மாகாணமாக GB இணைக்கப்படுவது என்பது, அதாவது இஸ்லாமாபாத்தின் கட்டுப்பாட்டின் கீழ் இணைப்பது என்பது இப்பகுதி ஒரு சர்ச்சைக்குரிய பகுதி என்ற இந்தியாவின் கூற்றுக்கு நேரெதிரானது. பிராந்தியத்தின் சர்ச்சைக்குரிய நிலையை மாற்றி, சட்ட அந்தஸ்தை வழங்குவதற்காக இந்த நடவடிக்கையை பாகிஸ்தான் மேற்கொண்டுள்ளது.

முன்னதாக GB பகுதி பாகிஸ்தானிய அதிகாரபூர்வ ஆவணங்களில் ‘வடக்கு பகுதிகள்’ என்று குறிப்பிடப்பட்டிருப்பதன் மூலம் இப்பகுதி ஒரு சர்ச்சைக்குரிய பகுதி என்பதை அறிந்து கொள்ள முடியும். பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரின் (PoK) ஒரு பகுதியாக GB பிராந்தியத்தை இந்தியா குறிப்பிடுகிறது, அதே நேரத்தில் பாகிஸ்தான் அதை 'ஆசாத் காஷ்மீரின்' ஒரு பகுதி என்று அழைக்கிறது, ஆனால் நாட்டின் ஐந்தாவது மாகாணமாக மாற்றுவதற்கான பாகிஸ்தானின் நோக்கம் காரணமாக 'ஆசாதி' தனது அந்தஸ்தை இழக்க உள்ளது.

CPEC அம்சம்

GB பகுதி, சீனாவின் கனவு திட்டமான சீனா-பாகிஸ்தான் பொருளாதார வழித்தடம் (CPEC) தொடங்கும் பகுதி என்பதால் சட்டப்பூர்வமான அந்தஸ்தை பெறுவதற்கான முயற்சிகள் சர்வதேச தாக்கங்களால் நிரம்பியுள்ளது.

CPEC திட்டப் பகுதி, சர்ச்சைக்குரிய GB பகுதி முழுவதும் இருப்பதால் தான் இந்தியா அதை எதிர்ப்பதற்கு ஒரு முக்கிய காரணம். இதை ஒரு மாகாணமாக்குவதன் மூலம் சீன முதலீடுகளுக்கான சட்டரீதியான தடைகளைத் தகர்த்து, சீனா இப்பகுதியில் நுழைவதற்கு வழிவகுக்கும்.

பாகிஸ்தானின் GB நடவடிக்கையின் காலம் மிகவும் முக்கியமானது. இந்தியாவிற்கும் சீனாவிற்கும் இடையில் நடந்து வரும் ராணுவ மோதலில் இரண்டாவது தாக்குதலை தொடங்குவதற்கு சமம்.

நவம்பரில், சீனா மற்றும் பாகிஸ்தானுடனான எல்லைக்கோட்டிற்கு அருகிலுள்ள பகுதிகளில் குளிர்காலமும் அதன் கோரமுகத்தை கட்டவிழ்த்துவிடும்.

இது ஒரு ராணுவ வீரர் எதிரியுடனும், வானிலைக்கு எதிராகவும், மற்றும் தனது மன உறுதியுடனும் என ஒரே சமயத்தில் மூன்று எதிரிகளுடன் சண்டையிடுவதற்கு ஒப்பானது. இந்தியாவின் விஷயத்தில், இருமுனை தாக்குதல் உண்மையாகிவிட்டால் அவை நான்கு எதிரிகளாக இருக்கக் கூடும்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.