ETV Bharat / bharat

மக்களவைத் தேர்தல்: 5ஆம் கட்ட வாக்குப்பதிவு தொடக்கம்!

author img

By

Published : May 6, 2019, 7:15 AM IST

Updated : May 6, 2019, 8:39 AM IST

5ஆம் கட்ட வாக்குப்பதிவு தொடக்கம்

2019-05-06 07:11:40

மக்களவை தேர்தலுக்கான ஐந்தாம் கட்ட வாக்குப்பதிவு உத்தரப்பிரதேசம், மத்தியப்பிரதேசம் உள்ளிட்ட ஏழு மாநிலங்களில் உள்ள 51 தொகுதிகளில் இன்று தொடங்கியது.

மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஏழு கட்டங்களாக நடைபெற்று வருகிறது. அந்த வகையில், ஐந்தாம் கட்ட வாக்குப்பதிவு உத்தரப்பிரதேசம், ராஜஸ்தான், மத்தியப்பிரதேசம், மேற்கு வங்கம், பிகார், ஜார்க்கண்ட், ஜம்மு-காஷ்மீர் உள்ளிட்ட ஏழு மாநிலங்களில் உள்ள 51 தொகுதிகளில் இன்று காலை தொடங்கியது. 

பல முக்கிய நட்சத்திர வேட்பாளர்களின் தொகுதிகளுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது. உத்தரப்பிரதேசத்தில் காங்கிரசின் சாம்ராஜ்யங்களாக கருதப்படும் ரேபரேலி, அமேதி தொகுதிகளில் போட்டியிடும் ஐக்கிய முற்போக்குக் கூட்டணித் தலைவர் சோனியா காந்தி, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் தலையெழுத்து இன்று நிர்ணயிக்கப்பட உள்ளது. 

ராகுல் காந்திக்கு எதிராக அமேதி தொகுதியில் மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி மீண்டும் களமிறங்கியுள்ளார். மத்திய அமைச்சரும், பாஜக மூத்தத் தலைவருமான ராஜ்நாத் சிங் களம் காணும் லக்னோ தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது. 

ராஜஸ்தானில் இன்று வாக்குப்பதிவு நடைபெறும் ஜெய்ப்பூர் கிராமப்புற தொகுதியில் பாஜக சார்பில்  மத்திய அமைச்சரும் ஒலிம்பிக்கில் பதக்கம் வென்றவருமான ராஜ்யவர்தன் ரத்தோர் போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து மற்றொரு ஒலிம்பிக் நட்சத்திரமான கிருஷ்ணா பூனியா காங்கிரஸ் சார்பில் களம் இறங்குகிறார்.

இது மட்டுமின்றி மத்திய அமைச்சர்கள் ஜெயந்த் சின்ஹா, அர்ஜுன் ராம் மேக்வால், வீரேந்திர குமார் கடிக் உள்ளிட்டோரின் தொகுதிகளிலும் இன்று வாக்குப்பதிவு  விறுவிறுப்பாக நடைபெற்றுவருகிறது. 

Intro:Body:Conclusion:
Last Updated : May 6, 2019, 8:39 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.