நாடாளுமன்றத்த தேர்தல் வரவிருக்கும் நிலையில் நாடு முழுவதும் உள்ள அனைத்துக் கட்சியினரும் தங்கள் தேர்தல் பரப்புரையை தொடங்கிவிட்டனர்.
இந்நிலையில் பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில், #VoteKar (வோட்கர்) என்ற ஹேஸ்டேக் பயன்படுத்தி திரைபிரபலங்கள் உட்பட பல்வேறு துறைகளில் பிரபலமாகவுள்ளபலருக்கும், தங்கள் ரசிகர்களிடம் வாக்களிப்பதன் முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துமாறு வலியுறுத்தியுள்ளார்.
கிட்டத்தட்ட அரை மணி நேரத்தில் இந்த ஹேஸ்டேக் பயன்படுத்தி, சுமார் 16 ட்வீட்கள்செய்துள்ள பிரதமர், ரித்திக் ரோஷன், மாதவன், அனில் கபூர், மாதுரி தீக்ஷித்உட்பட பல்வேறு பிரபலங்களை அப்பதிவில் டேக்(Tag) செய்துள்ளார்.
இது தொடர்பாக அவர் பதிவிட்டிருந்த ட்விட்டர் பதிவில், "என் இந்திய பெருமக்களே, இது #Votekar(வேட்கர்) என்று சொல்வதற்கான நேரம்.
வரவிருக்கும் தேர்தலில் நாம் வாக்களிப்பது மட்டுமில்லாமல் நம் நண்பர்கள், குடும்பத்தார் என அனைவரும் வாக்களிப்பதை உறுதி செய்வது நம் கடமை.
நீங்கள் இப்படி செய்வது, நேர்மறையான தாக்கத்தை எதிர்கால இந்தியாவில்உண்டாக்கும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்" என்று தெரிவித்திருந்தார்.