டெல்லி: இந்திய வெளியுறவு சேவை அலுவலகத்தில் 1992ஆம் ஆண்டு பணியில் சேர்ந்தவர் விக்ரம் குமார் துரைசாமி. இவர் வங்கதேசத்தின் புதிய தூதராக நியமிக்கப்பட்டுள்ளார்.
தற்போது, விக்ரம் குமார் துரைசாமி இந்திய வெளியுறவு துறையில் கூடுதல் செயலாளராக பணிபுரிந்துவருகிறார். இவர் ஏற்கனவே கொரியா, உஸ்பெகிஸ்தான் உள்ளிட்ட நாடுகளில் தூதராக பணியாற்றிய அனுபவமிக்கவர்.
டாக்காவின் தூதராக உள்ள ரிவா கங்குலி தாஸிற்கு பிறகு இந்தப் பொறுப்பை விக்ரம் குமார் துரைசாமி வகிக்க உள்ளார். துரைசாமி, இந்திய வெளியுறவு துறையில் பணியாற்றுவதற்கு முன்னதாக செய்தியாளராகவும் பணியாற்றியுள்ளார்.
வங்கதேசத்தின் புதிய தூதராக விக்ரம் குமார் துரைசாமி விரைவில் பொறுப்பேற்பார் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதையும் படிங்க: சுஷாந்த் சிங் மறைவு: இரங்கல் தெரிவித்த இஸ்ரேல் வெளியுறவுத்துறை அமைச்சர்!