ETV Bharat / bharat

குஜராத் முதலமைச்சர் உடல் நிலை குறித்து மருத்துவர்கள் ஆய்வு

காந்திநகர்: குஜராத் முதலமைச்சர் விஜய் ரூபானிக்கு கரோனா தொற்று அபாயம் ஏற்பட்டுள்ள நிலையில் அவருக்கு இன்று மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

Vijay rupani
Vijay rupani
author img

By

Published : Apr 15, 2020, 6:50 PM IST

Updated : Apr 15, 2020, 8:33 PM IST

குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள ஜமலாபூர் தொகுதியைச் சேர்ந்த காங்கிரஸ் எம்.எல்.ஏ. இம்ரான் கேதாவாலா தற்போது கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளார்.

இவர் அம்மாநில முதலமைச்சர் விஜய் ரூபானியிடம் நேரில் சந்தித்து ஆலோசனை நடத்திய பின் கரோனா பாதிப்பு உறுதியானதை அடுத்து, முதலமைச்சர் விஜய் ரூபானி தற்போது முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தன்னை தனிமைப்படுத்தியுள்ளார். மேலும், இனி அலுவல் நடவடிக்கையை காணொலி காட்சி மூலம் மேற்பார்வை செய்யவுள்ளதாகவும் முதலமைச்சர் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், விஜய் ரூபானியின் உடல் நிலை குறித்து மருத்துவர் அதுல் பட்டேல், ஆர்.கே. பட்டேல் குழு கரோனா அறிகுறி இருக்கிறதா என பரிசோதனை மேற்கொண்டது. முதலமைச்சருக்கு எந்த அறிகுறியும் இல்லை என பரிசோதனைக்குப் பின் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

மேலும், அவர் முழுமையான உடல் நலனுடன் இருப்பதாகவும் மாநில தலைமைச் செயலர் அஸ்வினி குமார் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: தெலங்கானா முதலமைச்சர் வலியுறுத்தும் 'ஹெலிகாப்டர் மணி' - ரிசர்வ் வங்கியால் முடிந்தது என்ன?

Last Updated : Apr 15, 2020, 8:33 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.