ETV Bharat / bharat

'வேலைக்குப் போகாதீங்க, வீட்டிலேயே இருங்க' - கதறி அழும் மகனை வாரியணைத்து தேற்றிய காவலர்! - வைரல் வீடியோ

மகாராஷ்டிரா: பணிக்குச் செல்ல வேண்டாம், வீட்டிலேயே இருங்க என்று காவலர் மகன் கதறி அழும் காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகிவருகிறது.

வைரல் வீடியோ
வைரல் வீடியோ
author img

By

Published : Mar 27, 2020, 11:12 AM IST

கோவிட்-19 பெருந்தொற்று காரணமாக இந்தியாவில் இதுவரை 700-க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டும், 16 பேர் உயிரிழந்தும் உள்ளனர். இந்நிலையில் இப்பெருந்தொற்றைக் கட்டுப்படுத்தும்விதமாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

மகாராஷ்டிராவில் கரோனாவால் உயிரிழப்போரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வருகிறது. இதனால் அம்மாநில காவல் துறையினர் ஊரடங்கை மக்கள் சரியாகப் கடைப்பிடிக்க பல்வேறு முயற்சிகளையும், விழிப்புணர்வுகளையும் மேற்கொண்டுவருகின்றனர்.

கதறி அழும் மகன்

இந்நிலையில், அந்த மாநிலத்தில் காவலர் ஒருவர் பணிக்குச் செல்வதற்காக சீருடை அணிந்துகொண்டிருந்தபோது அவரது இரண்டு வயது மகன், 'கரோனா தொற்று பரவிவருவதால் நீங்கள் வெளியே செல்ல வேண்டாம், வீட்டிலேயே இருங்கள்' என்று கதறி அழும் காட்சியும், அதற்குக் காவலர், தனது கடமையைச் செய்ய வேண்டும், உயர் அலுவலர் அழைப்புவிடுத்திருக்கிறார் எனக் கூறும் காட்சியும் பார்ப்போரைக் கண்கலங்கவைக்கும் விதமாக இருந்தது.

அப்படி அழுதுகொண்டிருந்த மகனை காவலர் தூக்கி தேற்றி பக்கத்தில் உள்ள அறையில் விடுகிறார்.

இந்தக் காட்சியை மாநில காவல் துறை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளது. இந்தப் பதிவு சமூக வலைதளத்தில் வைரலாகி அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

இதையும் படிங்க: இருமினால் இரண்டு ஆண்டுகள் சிறை!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.