கோவிட்-19 தொற்று நோயாளிகள், தொற்றால் உயிரிழந்தவர்களுக்கு களங்கம் விளைவித்த சம்பவம் தன்னை வேதனைப்படுத்தியதாக குடியரசுத் துணைத் தலைவர் வெங்கையா நாயுடு தெரிவித்துள்ளார். இதுபோன்ற சம்பவங்கள் இனி நடைபெறக்கூடாது என மக்களை அவர் கேட்டுக்கொண்டார்.
இதுதொடர்பாக அவர் தனது ஃபேஸ்புக் பக்கத்தில், " கோவிட்-19 தொற்று நோயாளிகளை புரிந்துகொண்டு இரக்கத்துடன் நடத்தவேண்டும். யாரும் இங்கு முழு பாதுகாப்புடன் இல்லை. யாரை வேண்டுமானாலும் இந்த வைரஸ் தாக்கலாம்" இவ்வாறு தெரிவித்துள்ளார்.
கரோனா தொற்றிவிடும் என்ற அச்சத்தில் கரோனா நோயாளிகளிடம் பாகுபாடு காட்டுபவர்களை எண்ணி கவலையடைவதாக வெங்கையா நாயுடு கூறியுள்ளார்.
கோவிட்-19 தொற்றால் உயிரிழந்தவர்களின் உடலை அடக்கம் செய்ய இடம் மறுக்கப்பட்ட நிகழ்வைக் குறிப்பிட்டு, இது முற்றிலும் ஏற்கமுடியாது என்றும்; இறுதி நிகழ்வில் உயிரிழந்தவரின் குடும்பத்தினரோடு இருக்கும் இந்திய மரபுக்கு இது எதிரான செயல் என்றும் தெரிவித்துள்ளார்.
தொற்று குறித்தும், பரவும் விதம் குறித்தும் மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஊடகங்கள், சுகாதாரத் துறை மேற்கொள்ள வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார்.
இதையும் படிங்க: ஜெய்ஷ் அமைப்பு பயங்கரவாதிகள் இரண்டு நாள்களில் 13 பேர் சுட்டுக்கொலை!