டெல்லியில் இந்தியன் பெண்கள் பிரஸ் கார்ப்ஸின் (Indian Women's Press Corps) சில்வர் ஜூப்லி நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் துணைக் குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடு கலந்து கொண்டு பேசினார். அதில்
"போலியான செய்திகள் வெளிவருவதைக் கட்டுப்படுத்த வேண்டும். இதனால் மக்கள் மத்தியில் தேவையற்ற குழப்பம், பயம் ஏற்படுகிறது.
ஊடகத்திற்கு உண்மை செய்தி வழங்குவதைத் தாண்டியும், மக்கள் இடையே அவர்களின் உரிமை, பொறுப்பு உள்ளிட்டவற்றை கற்பிக்கும் பொறுப்பும் உள்ளது.
செய்திகளைப் பரபரப்பாக கொண்டு சேர்க்க வேண்டும் என்பதற்காக, தேவையற்ற விஷயங்களை செய்தியில் சாயல் பூசி, மக்களிடம் திணிக்கப்படக் கூடாது. மாறாக, அதில் கூடுதல் கவனத்தோடு பத்திரிகைகளும், காட்சி ஊடகமும் செயல்பட வேண்டும்.
போலி செய்திகள், தேவையற்றப் பரப்புரை, பெய்டு நியூஸ் என்று கூறப்படும் கட்டணச் செய்திகள் ஆகியவை வெளி வருவதைத் தடுக்க, பிரஸ் கவுன்சில் ஆஃப் இந்தியா (Press Council of India) மற்றும் தொலைக்காட்சி ஊடகங்கள் (News Broadcasters Association) ஒன்று சேர்ந்து செயல்பட்டு, ஒரு தீர்வைக் கொண்டு வரவேண்டும்" என்று கேட்டுக் கொண்டார்.
மேலும் படிக்க: 'சட்டத்தைப் பின்பற்றினால் மனு தர்மம் என்னவாகும்?' - சுவாமி நிஸ்சாலந்தா பரபரப்பு கேள்வி!