புதுச்சேரி, ஈஸ்வரன் கோயில் வீதியில் வசித்து வரும் வழக்கறிஞர் கங்காதரனின் வீட்டு நிறுத்தப்பட்டிருந்த அவரது கார், திடீரென நள்ளிரவில் தீப்பற்றி எரிந்து சேதமாகியுள்ளது. இந்நிலையில், இது தொடர்பாக பெரியகடை காவல் துறையினரிடம் அவர் புகார் அளித்துள்ளார்.
அதனைத் தொடர்ந்து காவல் துறையினர் அங்கு சென்று பார்த்த போது, காரும் அதன் அருகிலிருந்த இரண்டு இரு சக்கர வாகனங்களும் எரிந்திருந்தது தெரிய வந்தது. இதனையடுத்து இது குறித்து அருகில் இருந்த சிசிடிவி காட்சிகளைக் கைப்பற்றிய காவல் துறையினர் விசாரணையைத் தொடங்கினர்.
அதில், நள்ளிரவில் இரு சக்கர வாகனத்தில் வந்த இருவர் இரண்டு இருசக்கர வாகனங்களுக்கு முதலில் தீ வைத்ததும், அதன் தொடர்ச்சியாக அருகில் இருந்த காரையும் தீப்பற்றியதும் தெரிய வந்தது. இந்நிலையில் இந்தச் சம்பவம் குறித்து பெரியகடை காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க...'ஆக்ஸிஜன் தடைப்பட்டு இருவர் உயிரிழப்புக்கு அரசின் அலட்சியமே காரணம்'