டெல்லியில் 19ஆம் நாளாகப் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக அதானி, அம்பானி பொருள்களைப் புறக்கணிக்கக் கோரி விடுதலைச் சிறுத்தைகள், சிபிஎம் சார்பில் காந்தி வீதி ஈஸ்வரன் கோவில் எதிரிலிருந்து ஊர்வலமாகச் சென்று அண்ணா சாலையில் உள்ள ஜியோ நிறுவனம் முன்பு இன்று (டிச. 14) ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
விவசாயிகளுக்கு ஆதரவாக நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் விழுப்புரம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ரவிக்குமார் தலைமையில் புதுச்சேரி ரிலையன்ஸ் கம்பெனியின் நிறுவனங்களில் ஒன்றான ஜியோ நிறுவனத்தின் முன்பு முற்றுகைப் போராட்டம் நடைபெற்றது.
இதில் அக்கட்சியின் புதுச்சேரி மாநில முதன்மை அமைப்பாளர் தேவ. பொழிலன், மேலும் இடதுசாரி கட்சிகள் ஒன்றாகச் சேர்ந்து ஜியோ நிறுவனம் முன்பு போராட்டம் நடத்தினர். இதனால் புதுச்சேரி அண்ணா சாலையில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
பின்பு ஜியோ செல்போனை சாலையின் நடுவே உடைத்து, மத்திய அரசு உடனடியாக விவசாயிகளுக்கு எதிரான மூன்று சட்டங்களைத் திரும்பப் பெற வேண்டும் என்று வலியுறுத்தி இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் கட்சியினர் பலர் கலந்துகொண்டனர்.
இதையும் படிங்க: வட்டி தொல்லை: 3 குழந்தைகளுடன் தம்பதி தற்கொலை!