சமீபத்தில் லண்டனில் இருந்து லக்னோவுக்கு திரும்பிய பிரபல பின்னணி பாடகி கனிகா கபூர், மருத்துவ பரிசோதனை செய்து கொள்ளாமல் பல விழாக்களில் கலந்துகொண்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில் அவருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதனிடையே, ராஜஸ்தான் முன்னாள் முதலமைச்சர் வசுந்தரா ராஜே கலந்துகொண்ட விழாவில் கனிகா கபூர் பங்கேற்றுள்ளார்.
அப்போது வசுந்தராவுடன் அவர் மகன் துஷ்யந்த் சிங், மருமகள் ஆகியோர் உடனிருந்தனர். இதனால் இவர்களுக்கும் நோய் பரவியிருக்கும் என்ற சந்தேகம் எழுந்த நிலையில், தங்களை தாங்களே தனிமைப்படுத்திக் கொண்டதாக ராஜே தெரிவித்துள்ளார்.
இதையடுத்து, வசுந்தரா ராஜே மருத்துவ பரிசோதனை செய்துகொண்டார். இந்நிலையில கோவிட் 19 தொற்றால் அவர் பாதிக்கப்படவில்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: பாஜக அமைச்சரால் செய்தியாளர்களுக்கு கரோனா?