நாடாளுமன்ற மாநிலங்களவையில் இன்று வைகோ பேசுகையில், ‘தமிழ்நாட்டின் டெல்டா பகுதிகள் மீத்தேன், கெயில் குழாய் பதிப்பு உள்ளிட்ட திட்டங்களால் பாதிக்கப்பட்டு வருகின்றன. இதற்கிடையில் கர்நாடகா வேறு காவிரியிலிருந்து தண்ணீர் தர மறுக்கிறது. டெல்டா மாவட்டத்தை பாலைவனமாக்கும் முயற்சிகள் நடக்கிறது. காற்று மாசுபாடு விவகாரத்தில் விவசாயிகளை மட்டும் குற்றம் சுமத்தாதீர்கள்.
அவர்கள் உங்களுக்கு உணவளிக்கிறார்கள். அவர்கள் மீது பழி போட வேண்டாம். காற்று மாசுபாடுக்கு பல்வேறு காரணங்கள் உள்ளன. அனைவரும் இதற்கு பொறுப்பெற்க வேண்டும்’ என்றார்.
இதையும் படிங்க: புதிய கல்விக் கொள்கை ஒரு புல்டோஸர் பாலிசி - வைகோ