ETV Bharat / bharat

இலங்கைத் தமிழர்களை வேண்டுமென்றே மசோதாவிலிருந்து நீக்கியுள்ளார்கள் - வைகோ குற்றச்சாட்டு - Vaiko in RS

டெல்லி: குடியுரிமை சட்டத்திருத்த மசோதாவில் இலங்கைத் தமிழர்களை வேண்டுமென்றே நீக்கியுள்ளார்கள் என வைகோ மாநிலங்களவையில் குற்றஞ்சாட்டியுள்ளார்.

Vaiko
Vaiko
author img

By

Published : Dec 11, 2019, 6:39 PM IST

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நவம்பர் 18ஆம் தேதி தொடங்கி நடைபெற்றுவருகிறது. பல முக்கிய மசோதாக்களை மத்திய அரசு இந்தக் கூட்டத்தொடரிலேயே நிறைவேற்றும் எனக் கூறப்பட்டது.

இதையடுத்து, குடியுரிமை சட்டத்திருத்த மசோதா டிசம்பர் 9ஆம் தேதி மக்களவையில் நிறைவேற்றப்பட்டது. இந்நிலையில், மாநிலங்களவையில் மசோதா இன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்த விவாதத்தில் பங்கேற்ற மாநிலங்களவை உறுப்பினர் வைகோ, "நாடாளுமன்றத்தில் இன்று நடைபெறுவதை அண்ணல் காந்தியடிகள் பார்த்திருந்தால், யமுனா நதிக்கரையை போராட்டக் களமாக மாற்றியிருப்பார்.

மோசமான, ஜனநாயகத்திற்கு விரோதமான, நியாயமற்ற, மன்னிக்க முடியாத, சட்டத்திற்கு எதிரான மசோதா நிறைவேற்றப்பட்டால், மாநிலங்களவை வரலாற்றில் கறுப்பு அத்தியாயமாக இது குறிப்பிடப்படும். ஒரு குறிப்பிட்ட சமூகத்தை மட்டும் குடியுரிமை சட்டத்திருத்த மசோதா பகைமை உணர்வுடன் அணுகுகிறது.

பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்கதேசம் ஆகிய நாடுகளிலிருந்து வரும் இஸ்லாமியர்கள் அல்லாதவருக்கு குடியுரிமை வழங்க மசோதாவில் வழிவகை செய்யப்பட்டுள்ளது. பாகுபாடு காண்பிக்கப்பட்ட மியான்மரைச் சேர்ந்த ரோஹிங்கியா இஸ்லாமியர்களுக்கும் இலங்கைத் தமிழர்களுக்கும் குடியுரிமை வழங்க இந்த மசோதாவில் வழிவகை செய்யப்படவில்லை. ஷியா, அஹமதியா ஆகிய பிரிவுகளைச் சேர்ந்த இஸ்லாமியர்களுக்கும் பாகுபாடு காண்பிக்கப்பட்டுவருகிறது. ஆனால், அவர்களுக்கும் குடியுரிமை வழங்க வழிவகை செய்யப்படவில்லை.

Vaiko

ஜனநாயகம், மதச்சார்பின்மை, சமத்துவம் ஆகிய கொள்கைகளுக்கு எதிராக தாக்குதல் தொடுக்கப்படுகிறது. இந்த மசோதாவை கண்டித்தும் திரும்பப்பெறக் கோரியும் இந்தியா, வெளிநாடுகளிலிருந்து 1047 அறிவியல் அறிஞர்கள், கல்வியாளர்கள் கடிதம் எழுதியுள்ளனர்.

நம் அரசியலமைப்புச் சட்டத்தின் அடிப்படையே அனைவரையும் சமமாக கருதுவதுதான். மதத்தை அடிப்படையாகக் கொண்டு குடியுரிமை வழங்கினால் அது அரசியல் சாசனத்துக்கு எதிரானதாகும்.

இஸ்லாமியர்களுக்கு மட்டும் பாகுபாடு காண்பித்தால் இது பன்முகத்தன்மை கொண்ட இந்தியாவை பாதிக்கும் என அவர்கள் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளனர். இலங்கைத் தமிழர்களை வேண்டுமென்றே மசோதாவிலிருந்து நீக்கியுள்ளார்கள்" என்றார்.

இதையும் படிங்க: இலங்கைத் தமிழர்களை மசோதாவில் சேர்க்காதது ஏன்? - சிதம்பரம் கேள்வி

Intro:Body:

#CitizenshipAmmendmentBill2019 - Vaiko speech in RS on srilanka tamils

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.