உத்தரபிரதேச மாநில கிழக்கு பகுதியின் காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளராக இருப்பவர் பிரியங்கா காந்தி. இவரது கணவரும், பிரபல தொழிலதிபருமான ராபர்ட் வதேரா, டெல்லியில நேற்று நடைபெற்ற ஆறாம் கட்ட மக்களவைத் தேர்தலில் வாக்களித்தார்.
இதைத் தொடர்ந்து தனது ட்விட்டர் பக்கத்தில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் "வாக்களிப்பது எனது உரிமை. அனைவரும் தேர்தலில் தவறாமல் வாக்களிக்க வேண்டும். அப்போது தான் பலமான, பாதுகாப்பான நாட்டை உருவாக்க முடியும்' என பதிவிட்டு இருந்தார். அதற்கு கிழே வணக்கம் குறியுடன் பராகுவே நாட்டின் தேசிய கொடியையும் பதிவு செய்திருந்தார்.
இது சமூக வலைதளங்களில் வைரலாகவும், பேச்சுப்பொருளாகவும் மாறியது. இதையறிந்த அவர் சிலர் மணி நேரத்தில் அந்த பதிவை அழித்தார். பிறகு நான் பராகுவே நாட்டின் குடிமகன் எனவும் பதிவிட்டிருந்தார். இதற்கு எதிர்கட்சியினர் பலர் விமர்சனம் செய்து வருகின்றனர்.