கடந்த வாரம் உத்தரகாண்ட் முதலமைச்சர் தலைமையிலான அமைச்சரவைக் குழுக்கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட மாநில சுற்றுலாத்துறை அமைச்சர் சத்பால் மகராஜ் மற்றும் அவரது குடும்பத்தினர் ஆறு பேருக்கு கரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டது.
இதையடுத்து, அமைச்சரவைக் கூட்டத்தில் கலந்துகொண்ட முதலமைச்சர் திரிவேந்திர சிங் ராவத் மற்றும் மூன்று அமைச்சரவை உறுப்பினர்கள் தாங்களும் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருக்கக்கூடும் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் சுய தனிமைப்படுத்தலில் ஈடுபட்டிருந்தனர்.
![Uttarakhand CM tests negative for COVID-19](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/04:17_7483072_zxc.png)
பின்னர்,முதலமைச்சர் திரிவேந்திர சிங் உள்பட அமைச்சர்களுக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதன் முடிவுகள் நேற்று வெளியானது.
அதில், முதலமைச்சர், அமைச்சரவை உறுப்பினர்கள் யாரும் கரோனா தொற்றால் பாதிக்கப்படவில்லை என்பது உறுதிசெய்யப்பட்டது. இதையடுத்து வழக்கம்போல் அமைச்சரவை உறுப்பினர்கள தங்களது பணிகளில் ஈடுபட தொடங்கியுள்ளனர்.