உத்தரப் பிரதேச மாநிலம் எட்டாவா மாவட்டத்தில் கடந்த சில ஆண்டுகளாக சொத்து விவகாரம் தொடர்பாக இரு குடும்பங்களிடையே பிரச்னை இருந்துள்ளது.
இந்நிலையில் நேற்றிரவு இரு குடும்பங்களிடையே சொத்து விவகாரம் தொடர்பாக மீண்டும் வாக்குவாதம் ஏற்பட்டது. ஒரு கட்டத்தில் வாக்குவாதம் முற்றிய நிலையில் பெண் ஒருவர் இதுதொடர்பாக காவல் நிலையத்தில் புகார் தெரிவிக்க செல்லவிருந்தார்.
அப்போது அவரது குடும்பத்தினர் அப்பெண்ணை கடுமையாகத் தாக்கியுள்ளனர். இந்தத் தாக்குதலில் அப்பெண் உள்பட அவரது இரண்டு குழந்தைகளுக்கும் காயம் ஏற்பட்டது.
இதையடுத்து அப்பெண்ணை சிகிச்சைக்காக அருகே உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் அவர் உயிரிழந்தார். இந்த விவகாரம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் அப்பெண்ணை அடித்துக்கொன்ற மூன்று பேரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.