லக்னோ: தனியார் மருத்துவமனையில் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த நோயாளியை விஷ ஊசி போட்டு கொலை செய்ய திட்டமிட்ட இருவரை காவல் துறையினர் கைது செய்தனர்.
மாநிலத்தின் கஸ்கஞ் மாவட்டத்தில் இந்த அதிர்ச்சிகர சம்பவம் அரங்கேறியுள்ளது. பிரமோத், ஷாந்தனு சவுத்ரி ஆகிய இருவர் இச்சம்பவத்தில் ஈடுபட்டது காவல் துறையினரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இதில் சம்பந்தபட்ட மூவர் தலைமறைவாகியுள்ளனர். சம்பவம் குறித்து காவல் துறையினர் தெரிவிக்கையில், ”கிருஷ்ணா மருத்துவமனையின் அவசர சிகிச்சைப் பிரிவில் ஒருவர் மருத்துவர் என்றும், மற்றொருவர் உறவினர் என்றும் நுழைந்துள்ளனர்”.
சிறுவனை மலம் அள்ள வைத்த விவகாரம் - நில உரிமையாளர் ராஜசேகர் கைது!
“நோயாளி விஜேந்திராவின் சிகிச்சைக் கோப்பில், பெரும் நோய்களுக்கு சிகிச்சையளிக்கும் கடும் ஒவ்வாமை ஏற்படுத்தும் அனாவின் மருந்தை அதிகளவில் பரிந்துரைத்து எழுதியுள்ளனர். இவ்வேளையில் நோயாளிக்கு அம்மருந்தை செலுத்தும் வேளையில், மருத்துவமனை நிர்வாகம் தவறு நடந்ததை கண்டறிந்து தடுத்துள்ளனர்” என்று தெரிவித்துள்ளனர்.