ETV Bharat / bharat

உபி.யில் 17 வயது பட்டியலின சிறுமியை பாலியல் வன்புணர்வு செய்தவர் கைது! - Dalit girl sexual harrasment

லக்னோ: 17 வயது பட்டியலின சிறுமியை பாலியல் வன்புணர்வு செய்தவரை காவல் துறையினர் கைது செய்து நடவடிக்கை மேற்கொண்டனர்.

பாலியல் வன்புணர்வு
பாலியல் வன்புணர்வு
author img

By

Published : Oct 6, 2020, 2:53 PM IST

உத்தரப் பிரதேச மாநிலம் பிரதாப்கரில் கடந்த ஞாயிறன்று (அக். 04) 17 வயது மதிக்கத்தக்க பட்டியலின சிறுமி அவரது வீட்டில் தனியாகத் தூங்கிக் கொண்டிருந்தார். இதையறிந்த அதே ஊரைச் சேர்ந்த சந்திரகேஷ் வர்மா வீட்டின் மாடி வழியே ரகசியமாகச் சென்று சிறுமியை பாலியல் ரீதியாகத் துன்புறுத்தியுள்ளார்.

அப்போது, சிறுமி அலறும் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் வீட்டிற்குள் சென்று பார்க்கவே, வர்மா கையும் களவுமாக மாட்டிக் கொண்டார். இது குறித்து காவல் துறையினருக்குத் தகவல் அளிக்கப்பட்டது.

இதையடுத்து சிறுமி, குற்றஞ்சாட்டப்பட்ட வர்மா ஆகியோரின் குடும்பத்தினர் திங்கள்கிழமை (அக். 05) காவல் நிலையத்திற்குச் சென்றுள்ளனர். அப்போது இருதரப்பினரிடையே சச்சரவு ஏற்பட்டுள்ளது.

இந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி வர்மா அங்கிருந்து தப்பியோடினார். இதனிடையே, சந்திரகேஷ் வர்மா மீது சிறுமியின் தாயார் கொடுத்த புகாரின் அடிப்படையில் இந்திய தண்டனைச் சட்டப் பிரிவின்கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. தொடர்ந்து சிறுமி மருத்துவப் பரிசோதனைக்காக அனுப்பிவைக்கப்பட்டார்.

இந்நிலையில் இன்று (அக். 06) குற்றஞ்சாட்டப்பட்ட வர்மாவை காவல் துறையினர் கைதுசெய்தனர்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.