ETV Bharat / bharat

உலக வர்த்தக அமைப்பின் அமைதிப் பிரிவை பயன்படுத்திய இந்தியா - உலக வர்த்தக அமைப்பு, அமைதிப் பிரிவு, இந்தியா

டெல்லி: ஏழை மக்களின் உள்நாட்டு உணவுத் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காகவும், 2018-19 ஆண்டிற்கான நெல் விவசாயிகளுக்கு கூடுதல் ஆதரவு நடவடிக்கைகளை வழங்கவும் இந்தியா உலக வர்த்தக அமைப்பின் அமைதிப் பிரிவைப் பயன்படுத்தியுள்ளது.

Used peace clause to provide excess support to rice farmers: India to WTO  business news  WTO  excess support to rice farmers  உலக வர்த்தக அமைதிப் பிரிவை பயன்படுத்திய இந்தியா  உலக வர்த்தக அமைப்பு, அமைதிப் பிரிவு, இந்தியா  உலக வர்த்தக அமைதிப் பிரிவை பயன்படுத்திய இந்தியா

author img

By

Published : Apr 10, 2020, 9:15 PM IST

உலக வர்த்தக அமைதிப் பிரிவின் கீழ், ஜெனீவாவை தளமாகக் கொண்ட அமைப்பின் தகராறு தீர்வு மன்றத்தில் வளரும் நாடு வழங்கிய பரிந்துரைக்கப்பட்ட மானிய உச்சவரம்பில் எந்தவொரு மீறலையும் எதிர்ப்பதை உலக வணிக அமைப்பின் உறுப்பினர்கள் தவிர்க்கிறார்கள்.

பரிந்துரைக்கப்பட்ட உச்ச வரம்புக்கு மேல் அல்லது அதற்கு மேற்பட்ட மானியங்கள் வர்த்தக சிதைவாக பார்க்கப்படுகிறது. அந்த வகையில், இந்தியா போன்ற வளரும் நாடுகளுக்கு உணவு உற்பத்தி வரம்பு பத்து விழுக்காடாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக உலக வர்த்தக அமைப்பு வெளியிடப்பட்ட அறிவிப்பில், 2018-19ல் இந்தியா தனது அரிசி உற்பத்தியின் மதிப்பு 43.67 பில்லியன் அமெரிக்க டாலராக இருந்ததாக தெரிவித்துள்ளது. அதற்காக ஐந்து பில்லியன்அமெரிக்க டாலர் மதிப்புள்ள மானியங்களை உலக வர்த்தக அமைப்பு வழங்கியுள்ளது.

இது பரிந்துரைக்கப்பட்ட பத்து விழுக்காடு உச்சவரம்பை நெருங்கியுள்ளது. நாட்டின் பொதுப்பங்குதாரர்களின் திட்டங்கள் உணவுப் பாதுகாப்பு நோக்கங்களுக்காக உலக வர்த்தக அமைப்பிற்கு தொடர்ந்து தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவின் ஏழைகளின் உள்நாட்டு உணவுப் பாதுகாப்பு தேவைகள், பாதிக்கப்படக்கூடிய மக்கள்தொகை, வணிக வர்த்தகம் மற்றும் மற்ற உணவுப் பாதுகாப்பு விஷயங்களில் இடையூறு ஏற்படாமல் இருக்க இந்தத் திட்டத்தின் கீழுள்ள பங்குகள் கையகப்படுத்தப்பட்டு வெளியிடப்படுகின்றன.

ஒவ்வொரு குறுவை குளிர்கால (காரீஃப்) சாகுபடி பருவத்திலும் அறுவடைக்கு முன்னர், வேளாண் செலவு மற்றும் விலைகளுக்கான ஆணையத்தின் பரிந்துரையின் அடிப்படையில், பல்வேறு விவசாய பொருட்களின் விலை மற்றும் விளைப்பொருட்களுக்கான நியாயமான விலை போன்ற மற்ற காரணிகளையும் கவனத்தில் கொண்டு கொள்முதல் செய்வதற்கான குறைந்தப்பட்ச ஆதரவு விலைகளை (எம்எஸ்பி) இந்தியா அறிவிக்கிறது.

மத்திய மற்றும் மாநில அரசுகள், பல்வேறு நலத்திட்டங்களின் ஒட்டுமொத்த தேவையை பூர்த்தி செய்வதற்காக இந்திய உணவுக் கழகம் (FCI)) இந்திய தேசிய வேளாண் கூட்டுறவு கூட்டமைப்பு (NAFED) மற்றும் பிறவற்றின் மூலம், விவசாயிகளிடமிருந்து உணவுத் தானியங்களை வாங்குகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.