டெல்லி: மாநிலங்களவையின் நடவடிக்கைகளில் பிராந்திய மொழிகளின் பயன்பாடு 2018-2020 காலப்பகுதியில் பன்மடங்கு அதிகரித்துள்ளது. இந்தியாவின் 22 பட்டியல் மொழிகளில் இந்தி, தெலுங்கு, உருது, தமிழ் ஆகிய மொழிகளுக்குப் பிறகு பரவலாக பயன்படுத்தப்படும் மொழிகளில் ஐந்தாவது இடத்தில் சமஸ்கிருதம் உயர்ந்துள்ளது.
2017ஆம் ஆண்டு ஆகஸ்டில் மாநிலங்களவைத் தலைவராக வெங்கையா நாயுடு பதிவியேற்றப் பின்பு, சபை உறுப்பினர்களிடம் தொடர்ந்து பிராந்திய மொழிகளை பயன்படுத்துவதன் அவசியம் குறித்து வலியுறுத்தி வந்ததன் விளைவாக பிராந்திய மொழிகளின் பயன்பாடு அதிகரித்துள்ளது தெரிகிறது.
மாநிலங்களவையில் பிராந்திய மொழிகளின் பயன்பாடு குறித்து மாநிலங்களவை செயலகம் மேற்கொண்ட ஆய்வின்படி, சபை நடவடிக்கைகளின் போது இந்தி மற்றும் ஆங்கிலம் பரவலாகப் பயன்படுத்தப்படும் மொழிகளாக உள்ளது. இருப்பினும், 21 மற்ற இந்திய மொழிகளின் பயன்பாடும் ஐந்து மடங்காக (512%) அதிகரித்துள்ளது தெரியவந்துள்ளது.
1952ஆம் ஆண்டில் மாநிலங்களவை நடைமுறைக்கு வந்தபின் முதல் முறையாக டோக்ரி, காஷ்மீர், கொங்கனி மற்றும் சோந்தாலி ஆகிய நான்கு மொழிகள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. மேலும் அஸ்ஸாமி, போடோ, குஜராத்தி, மைதிலி, மணிப்பூரி மற்றும் நேபாளி ஆகிய ஆறு மொழிகள் நீண்ட இடைவெளிக்குப் பிறகு பயன்படுத்தப்படுகிறது.
மாநிலங்களவை உறுப்பினர்கள் 2004 மற்றும் 2017 க்கு இடையில் 923 அமர்வுகளின் போது 269 முறை இந்தி தவிர 10 இந்திய மொழிகளை பயன்படுத்தியுள்ளனர். இதையடுத்து அந்த சந்தர்ப்பங்களில் அவர்கள் மற்ற மொழிகளைப் பயன்படுத்தியதன் விழுக்காடு 0.291 ஆக இருந்தது என மாநிலங்களவை செயலகம் தெரிவித்துள்ளது.
தற்போது, 2020ஆம் ஆண்டில், 33 அமர்வுகளின் போது ஒரு அமர்வுக்கு 1.49 என்ற விகிதத்தில் பிராந்திய மொழிகள் 49 முறை பயன்படுத்தப்படுவதாகவும், இதனால் பிராந்திர மொழிகளின் பயன்பாட்டு விழுக்காடு 512 ஆக அதிகரித்துள்ளது.
மாநிலங்களவையில் பிராந்திய மொழிகளின் பயன்பாடு
வ.எண் | மொழிகள் (இந்தி தவிர) | 2013-17 (329 அமர்வுகள்) | 2018-20 (163 அமர்வுகள்) |
1 | தமிழ் | 32 | 18 |
2 | தெலுங்கு | 19 | 33 |
3 | உருது | 19 | 24 |
4 | பெங்காலி | 6 | 17 |
5 | சமஸ்கிருதம் | 0 | 12 |
6 | மராத்தி | 3 | 6 |
7 | ஒடியா | 5 | 6 |
8 | கன்னடம் | 2 | 5 |
9 | பஞ்சாபி | 2 | 3 |
10 | மலையாளம் | 2 | 0 |
11 | அஸ்ஸாமி | 0 | 2 |