ETV Bharat / bharat

22 மொழிகளில் பேசி மக்களை வரவேற்ற குடியரசுத் துணைத் தலைவர் - குடியரசுத் துணைத் தலைவர் வெங்கையா நாயுடு

டெல்லி: சர்வதேச தாய் மொழி தினத்தை முன்னிட்டு நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்ட குடியரசுத் துணைத் தலைவர் வெங்கையா நாயுடு, 22 மொழிகளில் பேசி மக்களை வரவேற்றது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

Naidu
Naidu
author img

By

Published : Feb 20, 2020, 9:34 PM IST

சர்வதேச தாய் மொழி தினம் நாளை கொண்டாடப்படவுள்ளது. இதனை முன்னிட்டு டெல்லியில் நிகழ்ச்சி ஒன்று நடத்தப்பட்டது. இதில், கலந்துகொண்ட குடியரசுத் துணைத் தலைவர் வெங்கையா நாயுடு 22 மொழிகளில் பேசி சர்வதேச தின வாழ்த்துகளைத் தெரிவித்தார்.

பின்னர் பேசிய அவர், "உலகின் 40 விழுக்காடு மக்கள் தங்களின் தாய் மொழிகளில் கல்வியை கற்பதில்லை. நிர்வாகத்தை மக்களிடையே கொண்டுசேர்க்க இந்திய மொழிகள் உதவும். அரசை மக்கள்மயமாக்க அது உதவும். தேசத்தின் கலாசாரத்தை மொழிகள் வடிவமைத்து அதன் வளர்ச்சியில் பங்காற்றும். சமகாலத்தை வரலாற்றுடன் பிணைக்க மொழி முக்கியப் பங்கு வகிக்கிறது.

குடியரசுத் துணைத் தலைவர் வெங்கையா நாயுடு

தாய் மொழியை தினமும் கொண்டாட வேண்டும். வீடுகள், கூட்டங்கள், நிர்வாகம் ஆகியவற்றில் தாய்மொழியை மக்கள் இனி பயன்படுத்துவார்கள் என நம்புகிறேன். தாய் மொழியை பேசி எழுதி, பயன்படுத்திவதில் பெருமைகொள்வோம்" எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க: சவடு மணல் வழக்கு: உச்ச நீதிமன்றம் ஒத்திவைப்பு!

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.