இந்திய அலுவலர்கள் வழிநடத்தும் மூன்றாவது வருடாந்திர அமெரிக்க இந்திய 2+2 அமைச்சர்களுக்கு இடையேயான உரையாடலில் பாம்பியோ, அமெரிக்க பாதுகாப்பு அமைச்சர் மார்க் டி எஸ்பெர் ஆகியோர் இன்று (அக்.26) பங்கேற்கின்றனர்.
இந்த கூட்டத்தில், இந்தியா சார்பாக வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆகியோர் பங்கேற்கவுள்ளனர்.
இந்தியா-சீனா எல்லை பிரச்னை, பரிமாற்ற ஒத்துழைப்பு ஒப்பந்தம் (BECA), உலகளாவிய ஒத்துழைப்பு, தொற்றுநோய், இந்தியா-பசிபிக் பிராந்தியத்தில் நிலவும் சவால்கள் உள்ளிட்டவை குறித்து இந்தக் கூட்டத்தில் விவாதிக்கப்பட உள்ளது.