ETV Bharat / bharat

கரோனாவை விரைவாகக் கண்டறியும் ஆன்டிஜென் சோதனைக்கு அனுமதி! - அமெரிக்கா ஆன்டிஜென் சோதனைகள்

வாஷிங்டன்: கரோனா தொற்றை விரைவாகக் கண்டறியும் ஆன்டிஜென் சோதனைக்கு அமெரிக்காவின் உணவு மற்றும் மருந்து நிர்வாகம் அனுமதி அளித்துள்ளது.

US
US
author img

By

Published : May 10, 2020, 4:32 PM IST

கரோனா வைரஸ் (தீநுண்மி) அச்சுறுத்தலால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடு அமெரிக்கா. வல்லரசு நாடான அமெரிக்கா கரோனாவின் கோரப்பிடியில் சிக்கி பரிதவித்துவருகிறது.

13 லட்சத்திற்கும் மேற்பட்டோர் அமெரிக்காவில் கரோனா தீநுண்மி தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். நோய்த்தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை ஒவ்வொரு நாளும் 20 ஆயிரம் என தொடர்ந்துவருகிறது. தினமும் ஆயிரம் பேர் வரை அங்கு உயிரிழக்கின்றனர்.

இந்நிலையில், கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களை விரைவாகக் கண்டறிய சான் டியாகோவின் க்விடல் கார்ப்பரேஷன் உருவாக்கிய ஆன்டிஜென் சோதனைகளுக்கு அமெரிக்காவின் உணவு மற்றும் மருந்து நிர்வாகம் அனுமதி அளித்துள்ளது.

நாசி குழிக்குள் சேகரிக்கப்படும் மாதிரிகளைக் கொண்டு கரோனா தொற்று இருப்பதை ஆன்டிஜென் சோதனையின் மூலம் விரைவாகக் கண்டறிய முடியும்.

இதையும் படிங்க:அமெரிக்காவில், தலைவிரித்தாடும் வேலைவாய்ப்பின்மை!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.