லக்னோ: முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் ஆளும் உத்தர பிரதேசம் மாநிலத்தில் கோவிட்-19 தொற்றுக்கான பரிசோதனையின் எண்ணிக்கையை உயர்த்த அரசு திட்டமிட்டுள்ளது.
இதுவரை அம்மாநிலத்தில் 3200 நபர்கள், தினம்தோறும் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றனர். சஞ்சய் காந்தி மருத்துவக் கல்லூரியில் தற்போது செய்யப்பட்டு வரும் அளவை இரண்டரை மடங்கு உயர்த்தவுள்ளதாக அதன் தலைவர் ஆர்.கே. திமான் தெரிவித்துள்ளார்.
மேலும், பரிசோதனையின் மூலமே இந்த நோய்க் கிருமியின் பரவலைக் கட்டுக்குள் வைத்திருக்க முடியும் என அவர் கூறியுள்ளார். மேலும், சிறுசிறு உபாதைகளுக்கு தொலைபேசி மூலம் தொடர்புகொண்டு, அறிவுரைகளைப் பெற, மருத்துவக் கல்லூரி சார்பில் ஏற்பாடு செய்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.