உத்தரப் பிரதேச மாநிலம் புலந்தசர் மாவட்டத்தில் உள்ள கங்காகாட் பகுதியில் நடைபாதையில் சிலர் தூங்கிக் கொண்டிருந்தனர். அப்போது தறிகெட்டு ஓடிய பேருந்து அங்கு தூங்கிக் கொண்டிருந்தவர்கள் மீது ஏறி இறங்கியது.
இந்தக் கோர விபத்தில் நான்கு பெண்கள், மூன்று குழந்தைகள் என ஏழு பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். விபத்தை ஏற்படுத்திய ஓட்டுநர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். இந்த விபத்து குறித்து காவலர்கள் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.
இதையும் படிக்கலாமே