உத்தரப் பிரதேச மாநிலம் உஞ்சாகான் பகுதி அருகேயுள்ள முபாரக்பூர் கிராமத்தில் இது நடந்துள்ளது. இந்தக் கிராமத்தில் உள்ள ஒரு பெரிய வயலில் குழி தோண்டப்பட்டு, அதனுள் ஆறாயிரம் கோழிக் குஞ்சுகளும் கொட்டப்பட்டன என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
இது தொடர்பான காணொலி காட்சிகள் பரப்பப்பட்டுவருகின்றன. இந்நிலையில் இதுபோன்றவற்றை நிறுத்துமாறு உத்தரப் பிரதேச அரசு கேட்டுக் கொண்டுள்ளது. முன்னதாக கோழிகள், கோழி இறைச்சி மூலமாக கரோனா வைரஸ் தொற்று வேகமாக பரவுகிறது என வாட்ஸ்அப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் செய்திகள் பகிரப்பட்டன.
இதையடுத்து கோழி விலை சில்லறை சந்தைகளில் வெகுவாக குறைந்தது. தற்போதுள்ள நிலவரப்படி ஒரு கிலோ கோழி இறைச்சி ரூ.20க்கு கிடைக்கிறது. இதற்கிடையில் ஆட்டிறைச்சி குறித்தும் வதந்திகள் பரப்பப்பட்டுவருகின்றன. இதனால் ஆட்டிறைச்சி நுகர்வும் வெகுவாக குறைந்துவிட்டது.
இதனால் தங்களுக்கு வர்த்தகப் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக முகமது காலித் என்பவர் தெரிவித்தார். நாட்டில் 10 கோடி விவசாயிகள் நேரடியாக கோழி, கால்நடை வளர்ப்பு மற்றும் மீன்பிடிப்பில் ஈடுபட்டுள்ளனர். இதன் மூலம் மொத்த உள்நாட்டு உற்பத்திக்கு, ரூ .1.2 லட்சம் கோடிக்கு மேல் பங்களிப்பு செய்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: சென்னையில் தந்தை தவறவிட்ட குழந்தை தெலங்கானாவில் மீட்பு!