உத்தரப் பிரதேச மாநிலம் புலந்தசகர் பகுதியைச் சேர்ந்த 15 வயது பட்டியலினச் சிறுமி, அதே பகுதியைச் சேர்ந்த நபரால் பாலியல் வன்புணர்வுக்குள்ளாக்கப்பட்டார். இதையடுத்து, சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின்பேரில் குற்றவாளி போக்சோ சட்டத்தில் கைதுசெய்யப்பட்டு தற்போது சிறையில் உள்ளார்.
இதற்கிடையில், நேற்றிரவு அந்தப் பெண் பெட்ரோல் ஊற்றி தற்கொலை செய்ய முயன்றதாக காவல் துறையினருக்குத் தகவல் கிடைத்தது. ஆனால், அவர்கள் பெற்றோர் அளித்த தகவலின்படி, அவர்களது வீட்டிற்கு ஏழு பேர் கொண்ட கும்பல் வந்ததாகவும், அவர்கள் வீட்டில் பெட்ரோல் ஊற்றி எரித்ததுடன், தனது மகளை கடுமையாகத் தாக்கியதாகவும், அதுமட்டுமின்றி, தாங்கள் கொடுத்த வழக்கினை திரும்பப் பெறுமாறும் மிரட்டியதாகவும் தெரிகிறது.
இந்நிலையில், தீக்காயங்களுடன் சிகிச்சைப் பெற்றுவந்த சிறுமி நேற்றிரவு சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார். இதையடுத்து, ஏழு பேர் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்த காவல் துறையினர் இதுவரை மூவரை கைது செய்துள்ளனர்.
இதையும் படிங்க: ராஜஸ்தான்; பலாத்காரம் செய்யப்பட்ட பெண்ணின் வீட்டுக்கு தீ வைப்பு, தாய்-மகள் படுகாயம்!