வெளிமாநிலங்களில் சிக்கித் தவித்த ஆயிரக்கணக்கான குடிபெயர்ந்த தொழிலாளர்களை உத்தரப் பிரதேச மாநிலத்திற்கு அழைத்துவருவதற்காக காங்கிரஸ் 1,000 பேருந்துகளை ஏற்பாடு செய்திருந்தது.
ஆனால், அந்தப் பேருந்துகளை உத்தரப் பிரதேச எல்லைக்குள் செல்வதற்கு அம்மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் அனுமதியளிக்கவில்லை.
குடிபெயர்ந்த தொழிலாளர்களை அழைத்துவர ஏற்பாடு செய்திருப்பது காங்கிரஸ் கட்சி என்பதால் இந்த விவகாரத்தில் உத்தரப் பிரதேச அரசு அரசியல் செய்துவருகிறது என காங்கிரஸ் தரப்பில் பலரும் குற்றஞ்சாட்டிவருகின்றனர்.
இந்நிலையில், இது குறித்து நமது ஈடிவி பாரத்திடம் பேசிய காங்கிரஸ் செயலாளர் ஜுபைர் கான், “உத்தரப் பிரதேச அரசு குடிபெயர்ந்த தொழிலாளர்களின் துன்பங்களை வைத்து அரசியல் செய்துவருகின்றது.
குடிபெயர்ந்த தொழிலாளர்கள், தங்களது வீடுகளுக்கு கூடிய விரைவில் செல்வோம் என்ற நம்பிக்கையோடு உ.பி. எல்லையில் பேருந்துகளுடன் காத்திருக்கிறார்கள்” என்றார்.
இதையும் படிங்க: 1,000 பேருந்துகளை அனுமதிக்காக உ.பி. அரசு: காங். குற்றச்சாட்டு