உத்தரப் பிரதேச மாநிலம், சோன்பத்ரா கிராமத்தில் வசிக்கும் பழங்குடியின மக்களின் நிலங்களை தங்களுக்கு கொடுக்குமாறு மாற்று சமூகத்தினர் கட்டாயப்படுத்தினர். ஆனால் அதற்கு பழங்குடியின மக்கள் மறுப்பு தெரிவித்த நிலையில், அங்கு கலவரம் ஏற்பட்டு 10 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். இந்தக் கலவரத்தில் தொடர்புடைய 15 அரசு அலுவலர்களுக்கு எதிராக உத்தரப் பிரதேச அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.
சோன்பத்ரா மாவட்ட நீதிபதி, காவல்துறை கண்காணிப்பாளர் உள்ளிட்டோரை அவர்கள் பதவியில் இருந்து நீக்கி உத்தரப் பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் உத்தரவு பிறப்பித்துள்ளார். சோன்பத்ரா கலவரம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.